உலகத்தால், வஞ்சிக்கப்பட்ட ஒரு சபை 59-0628M 1. இயேசு கிறிஸ்துவாகிய, உம்முடைய குமாரனையும, மற்றும் எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவுக்குள் இலவசமாய் எங்களுக்குக் கொடுத்திருக்கிறீர். இயேசுவானவர் கல்வாரியிலே எங்களுக்காக கொடுத்த இந்த மகத்தான உன்னத பலியினால் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற சிலாக்கியங்களுக்காக, கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று எழுதப்பட்டிருக்கிற இந்த ஆறுதலைக் குறித்து நாங்கள் அறிந்து கொள்ளும்படியாகவும், உம்மாலே தயை பெறும்படியாகவும் அது மீண்டுமாக எங்களை ஐக்கியத்திற்குள்ளாக ஒப்புரவாக்கினது. இப்பொழுது, நாங்கள் இதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், எங்களுக்குள் இருக்கின்ற எல்லாவற்றோடும் அதை விசுவாசிக்கும்படியான விசுவாசத்தை நீர் எங்களுக்கு அருளுமாறு ஜெபிக்கிறோம். 2 இப்பொழுது கர்த்தாவே, இந்த நாளின் எல்லா பாடுகளையும், இந்த ஜீவியத்தின் எல்லா கவலைகளையும் நாங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, வாயிற்காப்போனிலிருந்து போதகர் வரையிலும், எங்களுடைய சிந்தையில் இப்பொழுது ஒன்றுமற்றவர்களாய் இருந்து, ஆனால் எங்களுடைய ஒன்று கூடுதலினால், நாங்கள் நன்மையான ஏதோ ஒன்றை செய்து முடிக்கும்படியாகவும், உம்மைக் குறித்து அதிகமாய் அறிந்துகொள்ளவும், பரிசுத்த ஆவியானவர் எங்களிடத்தில் பேசுவதை பயபக்தியோடு கேட்கும்படியாய் காத்திருப்போமாக. ஏனென்றால், கர்த்தாவே, உண்மையாகவே நாங்கள் அதற்காகத்தான் இந்த உஷ்ணமான நாளில் வந்திருக்கிறோம். உம்முடைய ஜீவனுள்ள வார்த்தையின் மூலமாக எங்களிடத்தில் பேசும், ஜீவனுள்ள வார்த்தையானது எங்களுக்குள் வாசமாயிருந்து, எங்களுக்குள் நிலைத்திருப்பதாக, அதாவது நாங்கள் உலகத்திற்கேற்றபடி உருவாக்கப்பட்டு, வேஷம் தரிப்பிக்கப்படாமல், எங்களுடைய ஆவியின் புதிதாகுதலினால் தேவனுடைய குமாரனின் சாயலுக்கு மறுரூபமாக்கப்படுவோமாக. ஓ, நாங்கள் அதை நினைக்கும்போது எங்களுடைய இருதயங்கள் நடுங்குகிறது, நாங்கள் தேவனுடைய குமாரரென்றும், தேவனுடைய குமாரத்திகளென்றும் அழைக்கப்படுவதை அறிந்துகொள்ள, சந்தோஷமானது எங்களுடைய ஆத்துமாக்களை நிரப்புகிறது. நாங்கள் அவருடைய இரண்டாம் வருகையின் விளிம்பில் நிற்கிறோம், எல்லா தேசங்களும், இராஜ்ஜியங்களும் எங்கள் பாதங்களின் கீழே நடுங்கிக் கொண்டிருக்கின்றன, உலகத்தின் எல்லாக் காரியங்களும் மறைந்துகொண்டேபோகிறது, ஆனால் என்றோ ஒருநாள் அவர் வந்து, ஒருபோதும் முடிவேயில்லாததும், அல்லது, ஒருபோதும் அசைக்கப்படாத ஒரு இராஜ்ஜியத்திற்குக் கொண்டு செல்வார் என்பதை அறிந்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் அந்த இராஜ்ஜியத்தின் பிரஜைகளாயிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கிறோம்! ஓ தேவனே, வார்த்தையாகிய தண்ணீர் கழுவுதலின் மூலமாக, பரிசுத்த ஆவியினால் இன்றைக்கு எங்களுடைய இருதயங்களையும், செவிகளையும் விருத்தசேதனம் செய்யும். ஏனென்றால் நாங்கள் இதை அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காக கேட்கிறோம். ஆமென். 3 நான் இந்தக் காலை இந்தப் பொருளை அணுக விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு சுகமளிக்கும் ஆராதனை இருக்கப் போவதாக இருந்தால், நான் சிறு வித்தியாசமான ஒன்றின் பேரில் பேசப் போவதாக இருந்தேன், ஆனால் ஜெப அட்டைகள் எட்டு மணியிலிருந்து எட்டு முப்பது மணி வரையிலும், அல்லது ஒன்பது மணி வரையிலும் கொடுக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துவிட்டோம். நான் இப்போதுதான்…ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பில்லி வீட்டிற்கு வந்து இங்கு ஒருவருமே இல்லையென்றும், ஆகவே அவன் ஜெப அட்டைகளை கொடுக்கவில்லையென்றும் அவன் கூறினான். ஆகையால் நாங்கள்…நான் சபையின் ஒரு திருத்துதலுக்காக, இந்தப் பாடப் பகுதியை எடுப்பதை குறித்து சிந்தித்துப் பார்த்தேன். ஆகையால் உலகத்தால், வஞ்சிக்கப்பட்ட ஒரு சபை: என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நான் இப்பொழுது நியாயாதிபதிகளின் புத்தகம், 16-ம் அதிகாரம், 10-ம் வசனத்திலிருந்து துவங்கி சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன். அப்பொழுது தெலீளாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சியமாகி மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீளாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீளாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி; சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும் கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னை சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சியமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீளாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள். அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள்; சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். 4 இப்பொழுது நான் இந்த ஒரு பொருளுக்காக, வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தில் கண்டறிந்த பாடப் பகுதியை, 2ம் அதிகாரத்தில் 21-வது வசனம் துவங்கி 23-வது வசனம் வரை வாசிக்க விரும்புகிறேன். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை வாசிக்கப்பட்ட தம்முடைய வார்த்தையோடு கூட்டுவாராக. 5 சிம்சோன், சபையைப் போலவே மகத்தாய் செயல்படும்படிக்கு, சரியாய் துவங்கினான். அவன் சரியான திக்கிலிருந்து துவங்கினான். அவன் துவங்கினபோது, ஒரு அஞ்சாநெஞ்சமுடைய வல்லமையான மனிதனாக அழைக்கப்பட்டான். அவன் அவருடைய வார்த்தைகளைக் காத்துக்கொண்டு, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றி, கர்த்தருக்கு சேவை செய்பவனாகவே துவங்கினான். அது ஏறக்குறைய சபையைப் போலவே இருந்தது. அது சரியாகத் துவங்கினதை, நாம் ஒரு உலகப்பிரகாரமான சொல்லமைப்பில் கூறுவது போல கூறினால், சரியான நிலையிலிருந்துதான் துவங்கினான். கர்த்தருடைய கற்பனைகளை காத்துக்கொள்ளத் துவங்கினான். சிம்சோன் கர்த்தரை பின்பற்றின வரையிலும், கர்த்தர் சிம்சோனை உபயோகித்தார். 6 ஏனென்றால், தேவன் எவரையுமே அவரைப் பின்பற்றுகிற எவரையுமே காத்துக்கொள்ளவும், உபயோகிக்கவும் முடியும், ஏனென்றால் அது தேவனுடைய அலுவலாயிருக்கிறது. ஆனால் நாம் தேவனுடைய காரியங்களிலிருந்து, தூரமாய் விலகிச் செல்லும்போது, அப்பொழுது தேவனால் நம்மை ஒருபோதும் உபயோகிக்கவே முடியாது. நாம் தேவனுடைய கட்டளைகளின்படியே உறுதியாய் நடக்கும்போது, நாம் வேதாகமத்தின் பக்கங்களில் தரித்திருந்து, எழுதப்பட்ட வார்த்தையினால் ஆராதிக்கும்போது, அவரை ஆவியிலும், சத்திய வார்த்தையிலும் ஆராதிக்கும்போது, அப்பொழுது தேவன் எந்த தனிப்பட்ட நபரையுமே உபயோகிக்க முடியும். ஆனால் அவர்கள் ஏதோ ஒன்றை பின்பற்றி விலகிச் செல்லும்படியான ஒரு கருத்தை தெரிந்தெடுக்கும்போது, அப்பொழுது தேவன் அந்த நபரை ஒருபோதும் உபயோகப்படுத்தவே முடியாது. 7 ஆகையால், சிம்சோன் இன்றைய சபையின் ஒரு—ஒரு சிறந்த பிரதிநிதியாய் விளங்குகிறான். சபையானது துவங்கினபோது, தேவனால் சபையை உபயோகிக்க முடிந்தது, ஏனென்றால் சபையானது கர்த்தருடைய கட்டளைகளை ஊக்கமாய் பின்பற்றிச் சென்று, அவருடைய எல்லா நியாயத்தீர்ப்புகளையும், அவருடைய நியமனங்களையும் கைக்கொண்டு, அவருடைய எல்லா கற்பனைகளையும் நிறைவேற்றினது. தேவன் சபையோடு இருந்தார். ஆனால் சபையின் மத்தியில் அப்பேர்ப்பட்டதான பெலவீனமான ஒரு ஸ்தானம் இருக்கிறது என்பது தென்படுகிறது. 8 நினைவிருக்கட்டும், நாம் ஒரு வனபோஜனத்தில் இல்லை, ஆனால் நாம் ஒரு யுத்தகளத்தில் இருக்கிறோம். அநேக ஜனங்கள் அவர்கள் கிறிஸ்தவர்களாக ஆகத் தொடங்கும்போது, அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான் என்றும், அதுவே இதை என்றென்றைக்குமாய் தீர்க்கிறது என்றும், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்ற காரணத்தால் ஒவ்வொரு காரியமும் எளிதாய் வரப்போகின்றது என்றும் வெறுமனே நினைக்கிறார்கள். உங்களுடைய சிந்தையில் அவ்வாறு ஒருபோதும் நினைக்க வேண்டாம். ஏனென்றால், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராட, போராடவே நான் ஒரு கிறிஸ்தவனானேன். யுத்த அணி வரிசைகளில் சேரவே நான் ஒரு கிறிஸ்தவனானேன். நாம் கிறிஸ்தவ போர்வீரர்களாய் இருக்கிறோம், நாம் எப்படி போரில் போரிட வேண்டுமென்பதை அறிய, எப்படி தற்காப்பு செய்து முற்றுவிக்க வேண்டுமென்று அறிய எதிரியின் எல்லா உபாய தந்திரங்களையும் அறிந்தவர்களாய், பயிற்றுவிக்கப்பட்டு கொண்டு வரப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு வெளிப்படுத்தினால் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும். நாம் யுத்தத்திற்கு செல்கிறபோது, ஏதோ மற்ற தேசங்கள் நமக்கு கூறுகிற, அவர்களுடைய கருத்துக்கள் சிலவற்றை நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் நாம் நம்முடைய சொந்தக் கருத்துக்களை, பரிசுத்தாவியானவர் நம்மை வழிநடத்தும் விதமாக, அவர் நமக்குத் தரும் கருத்துக்களையே எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவரே கிறிஸ்தவர்களினுடைய சேனையின் பிரதான போர் படைத் தலைவராய் இருக்கிறார். 9 சிம்சோன் நன்றாகவே செயல்பட்டான், அவன் விளையாட்டுத்தனமானவன் என்று (நாம் அதை அவ்வாறு அழைப்போம்) அவ்விதமாக ஆகத் துவங்கும் வரையிலும், அவன் தன்னுடைய சொந்த எல்லையை விட்டுப்போகத் துவங்கும் வரையிலும் அவன் ஒரு மகத்தான மனிதனாய் இருந்தான். சபையும் நன்றாகவே செயல்பட்டது, அவர்கள் தங்களுடைய எல்லையை விட்டுச் செல்லத் துவங்கும் வரையிலும் சரியாகவே இருந்தனர். சிம்சோன் சரசமாடத் துவங்கினான். அவன் இஸ்ரேலியப் பெண்களோடு சரசமாடிக் கொண்டிருக்கவில்லை, அவன் பெலிஸ்தியப் பெண்களோடு சரசமாடத் துவங்கினான். 10 சபையானது செய்ததற்கு அது ஒத்ததாயிருக்கிறது. அது தனக்குச் சொந்தமானவர்களோடு அன்பாயிருக்கத் துவங்கவில்லை, அது புறம்பேயுள்ள அவிசுவாசிகளைப் பின்தொடர்ந்து, அவிசுவாசிகளோடே சரசமாடத் துவங்கினது. அங்கேதான் நாம் நம்முடைய பெரிய தவறைச் செய்தோம், சபையானது சரியில்லாத காரியங்களை செய்ய துவங்கினதே, மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாய் இருந்தது. அது சிம்சோனைப் போலவே, மோசமான தோழமையை, வைத்துக்கொள்ளத் துவங்கினது. 11 சிம்சோன், அவன் கர்த்தருடைய ஜனங்களின் தோழமையில் இருந்த வரையிலும், அவன் சரியாய் செயல்பட்டான். ஆனால் அவன் மோசமான தோழமைகளோடு சரசமாடத் துவங்கினபோதோ, அப்பொழுதே அவன் தொல்லைக்குள்ளானான். 12 அது சபையோடும் அதேவிதமாகவே இருக்கிறது. சபையானது பயபக்தியாய் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை பின்பற்றினபோது, தேவன் அவர்களை ஆசீர்வதிக்க, அற்புதங்களும், அடையாளங்களும், அதிசயங்களும் சபையை பின்தொடர்ந்தன. ஆனால் அது மோசமான தோழமையை வைத்துக் கொள்ளவும், உலகத்தோடிருக்கவும் துவங்கினபோதோ! அது மோசமான காரியங்களில் ஒன்றை செய்தது, அது செய்த முதல் காரியம், அது விசுவாசிகளுக்குள்ளிருந்த ஐக்கியத்தைக் குலைத்து, ஸ்தாபனமாகத் துவங்கினது, ஏனென்றால் தேசங்கள் கூட்டினைவாக்கப்பட்டிருந்தன என்பதை அவர்கள் கண்டறிந்திருந்தனர். ஆனால் இந்த மகத்தான சுவிசேஷம் ஒரு தேசத்திற்கோ அல்லது ஒரு ஜனத்திற்கோ அர்ப்பணஞ்செய்யப்படவில்லை. இது “விருப்பமுள்ளவன் வரக்கடவன்,” என்றபடி எல்லா தேசங்களுக்கும், எல்லா இனத்தாருக்கும், எல்லா பாஷைக்காரர்களுக்கும், எல்லா ஜனங்களுக்கும் அர்ப்பணஞ்செய்யப்பட்டிருக்கிறது. தேவன் நமக்காக எல்லைக் கோடுகளை வகுக்க ஒருபோதும் திட்டமிடவில்லை. 13 ஆனால் மனிதர்களோ அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, அல்லது பின்பற்றி, உலகம் செய்கிறது போலவே செயல்படவும், அவர்கள் செய்கிற காரியங்களைக் கூறவும், அவர்களுக்கிருந்த நற்பயனைப் போன்று அதே விதமான நற்பயனை ஏற்படுத்திக்கொள்ளவும் விரும்பினர். உலகம் செய்கிற எந்தக் காரியத்தையும் நாம் செய்து ஒரு வெற்றியை ஒருபோதும் உண்டாக்க முடியாது. நாம் தேவனுடைய நியமங்களையும், அவருடைய வழியில் காரியங்களையும் செய்து பின்தொடருகிறபோது மட்டுமே நாம் வெற்றியுடையவர்களாக இருக்க முடியும். நாம் உலகத்தை முன் மாதிரியாகக் கொண்டு செயல்படுபவர்களாய், ஒருபோதும் இருக்க முடியாது. சிகரெட் நிறுவனம் தன்னுடைய மகத்தான வெற்றியை தொலைக்காட்சி மூலம் சந்தித்திருக்குமானால், பீர் மற்றும் விஸ்கி போன்ற மதுபான நிறுவனங்கள் தொலைக்காட்சியின் உதவி மூலமாய் தங்களுடைய மகத்தான வெற்றியை சந்தித்திருந்தாலும், சபையானது தொலைக்காட்சியினால் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டும் என்பதற்கு ஒரு அடையாளமும் இல்லை. சபையின் வெற்றியானது சுவிசேஷத்தின் பிரசங்கத்தில், தேவனுடைய வல்லமையில், ஆவியின் கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுவதில் இருக்கிறது. நாம் தொலைக்காட்சியானது சிகரெட் நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் இன்ன—இன்ன செய்துள்ளது என்ற காரணத்தைக் கூறமுடியாதே! அந்த ஜனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கும்படியான எந்த வேதவாக்கியமும் நமக்குக் கிடையாது. நாம் அதை செய்கிற வரையிலும், நாம் அதிக எண்ணிக்கையுள்ள ஜனங்களைக் கூட்டிச் சேர்க்கலாம், ஆனால் அதைச் செய்ய தேவன் நம்மை நியமிக்கவில்லை. நாம் பெயர்பெற்றவர்களாகி, விரைவாக முன்னேறி, பெரிய ஸ்தாபனங்களாய், மகத்தான, புகழ்மிக்க காரியங்கள் சம்பவிப்பதன் காரணத்தால் அதுவே ஒரு வெற்றி என்று நாம் நினைக்கிறோம். ஆவிக்குரிய பிரகாரமாகப், நாம் ஒவ்வொரு நாளும் மரித்துக்கொண்டே யிருக்கிறோம்! நாம் இந்தக் காலை ஒரு கோடி பேர்களோடு பலமாய் நின்று, பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இல்லாதிருப்பதைக் காட்டிலும், நம்மோடு பரிசுத்த ஆவியோடு உள்ள பத்து பேரோடு பலமாய் நின்றால் நாம் நன்றாய் செயல்படலாம். நாம் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. 14 முதலாவது காரியங்களில் ஒன்று என்னவென்றால், சபையானது தன்னை ஸ்தாபனமாக்கிக்கொள்ளத் துவங்கினது. முதலாவது ஸ்தாபனம் கத்தோலிக்க சபையாய் இருந்தது, பின்னர் லூத்தரன் சபை உருவானது. கத்தோலிக்க சபையில் அவர்கள் அதை ஒரு ஸ்தாபனமாக ஸ்தாபித்துக்கொண்டபோது, ஒரு நாள் அங்கே ஒரு சத்தம் உண்டாகி, “சிம்சோனே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்து விட்டார்கள்” என்றது. சிம்சோன் கத்தோலிக்க சபையின் கட்டுக் கயிறுகளை அறுக்க, மார்ட்டின் லூத்தர் ஸ்தாபனத்தோடு, வெளியே வந்தார். 15 பின்னர் தெலீளாள் செய்ததுபோல, மற்றொரு கயிற்றினால் கட்டினார்கள். அவர்கள் துவக்கத்தில்…பரிசுத்த ஆவியினால் அழைக்கப்பட்ட மனிதர்களாய், தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களாய் இருப்பதற்கு பதிலாக; ஒருகால் அவர்களுடைய மொழியின் முதலெழுத்து கூட தெரியாதிருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் கிறிஸ்துவை அறிந்திருந்தனர். பின்னர் சபையானது கவர்ச்சித் தோற்றமுடைய, ஒருவகையான அரசியல் சொற்பொழிவாளர்களைப் போன்றவர்ளைப் பெற்றுக்கொண்டது. அவர்கள் தங்களுடைய பிரசங்கிமார்களுக்கு “திருச்சபையின் அறிவார்ந்த திருத்தந்தை பட்டத்தை” கொடுக்க வேண்டியதாய் இருந்தது, ஒவ்வொருவரும் இறைமையியல் பட்டத்தை உடையவர்களாய் இருக்க வேண்டியிருந்தது. அது சபையை கட்டவிருந்த மற்றொரு கயிறாயிருந்தது. ஜனங்கள் சென்று பயில்கிறார்கள், ஒவ்வொரு வேதபாடசாலையும், “எங்களுடைய போதகர் ஒரு இறைமையில் பட்டதாரி” என்று அவர்களுடைய சபையில் பெருமையடித்துக் கொள்ளும்படியான ஒரு மேலான கற்றறிவாளரை உருவாக்க முயற்சிக்கிறது. ஆகவே அவர்கள் என்ன செய்தனர்? ஒருவர் மற்றவரைக் காட்டிலும் அறிவாற்றல் உள்ளவராக இருக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள். பாருங்கள், அது தேவனுடைய பார்வையில் எந்தக் காரியத்தையும் சுட்டிக் காட்டுகிறதில்லை. 16 எந்த மனிதனுமே தன்னுடைய உலகப்பிரகாரமான அறிவை எடுத்து, அதினால் தேவனை பிரியப்படுத்த முயற்சிக்க வேண்டியதில்லை. அது தேவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறதே! நீங்கள் தேவனை ஒருபோதும் உலகப்பிரகாரமான புகழார்வங்களினாலும், அறிவினாலும் பிரியப்படுத்தலாகாது, “ஏனென்றால் அது தேவனுக்கு விரோதமான பகை” என்று வேதம் கூறுகிறது. அவர் அதைச் செய்ய முடியாது. 17 ஒவ்வொருவரும் எல்லா ஞானத்தையுமுடையவர்களாய் இருக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், எந்த வார்த்தைகளைக் கூற வேண்டும் என்றும் அறிந்திருக்கிறார்கள், அது பாவத்தை வெளிப்படுத்தி மனித இருதயத்தை ஆழ்த்துகிற பரிசுத்த ஆவியின் செய்தியாய், வல்லமையாய் நிரூபிக்கப்படுகின்ற ஒன்றாயிருப்பதற்கு பதிலாக வெறுமனே ஒரு அரசியல் சொற்பொழிவாய் ஆகிவிட்டது. அவர்கள் அரசியல் சொற்பொழிவுகளுக்காக பயிற்றுவிக்கப்படுகின்றனர், அது நமக்கு தேவையில்லை. பவுல், “வசனம் எங்களிடத்தில் வந்தது, மட்டுன்றி…இல்லை, சுவிசேஷமானது, வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதலோடும் வந்தது” என்றான். அதுவே சுவிசேஷத்தைக் கொண்டு வந்தது, பரிசுத்த ஆவியின் வல்லமைகளை கிரியைகளின் மூலம் நிரூபித்தல்! ஆனால் இந்த மனிதர் எல்லாருமே வேத பாடசாலைகளுக்குச் சென்று, அவர்கள் எப்படி ஜனங்களுக்கு முன்பாக நிற்க வேண்டுமென்றும், அவர்கள் தங்களை எப்படி காட்சியளிக்க வேண்டுமென்றும், அவர்கள் எப்படி உடை உடுத்த வேண்டுமென்றும் மற்றும் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், அவர்கள் ஒருபோதும் தவறாக இலக்கணத்தை உபயோகிக்க கூடாதென்ற மேலான கல்வியை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இப்பொழுது, ஒரு அரசியல் சொற்பொழிவிற்கு அது சரியானது, ஆனால் நாம் மனித வார்த்தைகளின் வசீகரிப்பின் பின்னே இருக்கவில்லை. பவுல், “நான் பிரசங்கித்த சுவிசேஷம் அந்தவிதமாய் வராமல், பரிசுத்த ஆவியின் புதுப்பித்தலினாலும், உறுதிப்படுத்தும் பெலத்தினாலும் வந்தது” என்றான். அது உங்களுடைய ஞானத்தினால், அல்லது நீங்கள் நம்பிக்கை வைக்கும் மனித ஞானத்தினாலான, சரியான இலக்கிய நய சொற்பொழிவினால் வருகிறதில்லை. ஆனால் அது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையான உறுதிப்படுத்துதலின் மூலமாய் வருகிறது. “அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அவரை அறிவதே” சுவிசேஷமாகும். 18 ஒவ்வொரு ஸ்தாபனமும், ஒவ்வொருவரும் தான் மற்ற மனிதனைக் காட்டிலும் சற்று சாதுரியவான் என்று எண்ணிக்கொள்ளவே முயற்சிக்கிறான். மெத்தோடிஸ்டுகள், “நாங்கள் சாமர்த்தியமான மனிதனைப் பெற்றுவிட்டோம்” என்பார்கள். பாப்டிஸ்டு மற்றும் கிறிஸ்துவின் சபை, முதலானவர்கள், அவர்கள் எல்லோரும், “நாங்கள், நாங்கள் தான் சாமர்த்தியசாலிகள். நாங்கள், எங்களுடைய—எங்களுடைய ஜனங்களை, சாதாரண மனிதன் வெறுமனே வெளியே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நாங்கள் அனுமதிக்கிறதில்லை” என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவராக இவர்களை தெரிந்தெடுக்கிறார்கள். (ஓ தேவனே இரக்கமாயிரும்!) அவர்களை ஒவ்வொருவராக தெரிந்தெடுக்கிறார்கள்; அவர்களுடைய குறிப்பிட்ட போதகத்தினால் அவர்கள் தோய்விக்கப்படுவார்களானால், அப்பொழுது அவர்கள் சபையில் அவர்களை அனுப்புகிறார்கள். தேவன் அவனை எவ்வித்திலும் தொடவே முடியாது. நான் பரிசுத்த ஆவியினால் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிற யாராவது ஒருவர் எனக்கு பிரசங்கிக்க விரும்புகிறேன், மனிதனால் அல்லது ஸ்தாபனங்களால் தெரிந்தெடுக்கப்படாதவனையே தேவன் எழுப்புகிறார். 19 அனைத்துமே அறிவு! அவர்கள், “ஓ, நாங்கள் அதைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறோம்” என்கிறார்கள், அவர்களில் சிலர் பரிசுத்த ஆவியின் முதல் எழுத்தையே அறியாதிருக்கிறார்கள். அவர்கள் அதை மறுதலிக்கிறார்கள். 20 இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் ஒருநாள் நான் வாசித்த ஒரு சிறு புத்தகத்தைக் குறித்து எனக்கு நினைப்பூட்டுகிறது. நான் அதை பழைய புத்தகக் கடையில் எடுத்தேன். நான் அதன் ஆசிரியர் யார் என்பதை மறந்து விட்டேன். வெறுமனே பத்து சென்ட் விலையுள்ள ஒரு சிறிய புத்தகம், ஆனாலும் அது வேடிக்கையானதாகவும், தந்திரமானதாகவும் காணப்பட்டாலும் அது சில நல்ல கருத்துக்களைக் கொண்டதாயிருந்தது. ஆனால், எனக்கோ, சரியாக தேவனைப் போன்று எனக்கு காணப்பட்ட ஏதோ ஒன்றை நான் அங்கே கண்டேன். அந்த சிறு கதைகளில் ஒன்று இவ்விதமாய் ஆரம்பித்தது. ஒருநாள் காலை ஒரு பெரிய கோழிக் கூண்டில், அறிந்துகொள்ளப்பட வேண்டியதாயிருந்த எல்லா அறிவையும் தான் பெற்றிருந்ததாக நினைத்துக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சிறு சேவல் இருந்தது. எனவே அது பறந்துபோய் ஒரு பெட்டியின் மேல் அமர்ந்து தன்னுடைய சிறிய அலகினால் பெட்டியை, நான்கு அல்லது ஐந்து முறைகள் கொத்தி, தன்னுடைய சிறிய தலையைத் துலுக்கி நீங்கள் ஒரு சேவல் கூவுவதையே கேட்டிராததைப் போன்று கூவிற்று. அது மற்றவர்களை, அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து, அது, “இந்தக் கோழிக் கூண்டிலிருக்கும் சீமான்களே, சீமாட்டிகளே, நான் இந்தக் காலையில் உங்கள் யாவரோடும் நாம் திட்டமிட்டிருக்கிற ஒரு மகத்தான கல்வித்திட்டத்தை குறித்து பேச விரும்புகிறேன்” என்றது. தொடர்ந்து, அது தன்னுடைய அலகிற்கு மேலே தன்னுடைய சிறிய மூக்குக்கண்ணாடியை இழுத்து சரிசெய்வது போல செய்து, “என்னுடைய படிப்பாய்வில் எனக்கு அதிகப்படியான அறிவு தேவையாயுள்ளது” என்றது. மேலும் அது, “கோழிகளாகிய நாம் நம்மை அதிகப்படியான ஞானத்தினால் மேன்மையாக்கிக் கொள்ள முடியும் என்பதை நான் தீர்மானித்திருக்கிறேன். ஆகையால், அது எங்கே என்று நான் உங்களுக்குக் கூறமுடியும் என்றும், நாம் ஒரு குறிப்பிட்ட கூண்டிலோ அல்லது பொந்திலோ தோண்டினால், நாம் நமக்கு மேம்பட்ட கூவுந்தன்மையை உண்டுபண்ணும் கவர்ச்சிகரமான சிறகுகளுக்கான ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்தைக் கண்டுபிடிக்கலாம். மேலும், ஓ, நாம் இன்னும் பல வித்தியாசமான வழிகளில் எப்படி நம்மை மேன்மையாக்கிக் கொள்ள முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறமுடியும்” என்றது. 21 அப்பொழுது அந்த சிறிய இளம் பெட்டைக் கோழிகள் தங்களுடைய சிறிய சிவந்த கொண்டைகளோடு, அவைகள் அப்படியே கொக்கரித்து, “இவன் அருமையானவனல்லவா?” என்றன. அவைகள் நிச்சயமாகவே அவனை வியந்து பாராட்டின. “ஓ, அவன் எப்பேர்ப்பட்ட ஒரு திறமையான சேவல்!” அது இங்குள்ள சில வேதபாடசாலை பிரசங்கிமார்கள் சிலரை எனக்கு நினைப்பூட்டுகிறது. “அப்படிப்பட்ட ஒரு திறமைமிக்க மனிதன்! நாம் மற்ற கோழிகளோடு ஒட்டிக்கொண்டு சுற்றவேண்டிய அவசியமேயில்லை, நாம் யாவரும் அவனோடு போகத்தான் வேண்டும்” என்றன. 22 பாருங்கள், அந்த சிறு சேவல் தன்னுடைய உரையை முடிக்கும் முன்னரே, இப்படிப்பட்ட பளபளப்பான இறக்கைகளை பெற்றிராமல் இருந்த மற்றொரு சிறிய கோழி, மற்ற கோழிகளின் முற்றத்திலிருந்து ஓடிவந்து, “கோழிகளே, ஒரு நிமிடம் அப்படியேயிருங்கள்! நான் சமீபத்தில் வானொலியில் கூறின அறிவிப்பை இப்பொழுதுதான் கேட்டேன். கோழிகள் பவுண்டுக்கு நான்கு சென்டாக விலை ஏறிவிட்டதாம், எனவே நாளை நாம் யாவரும் இறைச்சிக்காக வெட்டிக் குவிக்கப்படப் போகிறோமே! உங்களுடைய அறிவு என்ன நன்மையை செய்யப்போகிறது?” என்றது. 23 சகோதரனே, நாம் சேகரிக்க முடிந்த எல்லா அறிவும், என்ன நன்மையைச் செய்கிறது? நாம் ஆறடியுள்ள புழுதியாயிருக்கிறொமே! நாம் யாவரும் நிமிடத்திற்கு நிமிடம் அங்குலம் அங்குலமாக மரித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய அறிவு ஒன்றுமற்றதாய் கருதப்படுகிறது. நாம் அவரை அறிந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அதை செய்கிறார்கள். 24 சற்று நேரத்திற்கு முன்பு நான் ஒரு குறிப்பிட்ட சிறு மஞ்சள் நிறக் குருவியைக் குறித்து குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன், அது—அது அறிந்து கொள்ளவேண்டியிருந்த எல்லா அறிவையும் அது அறிந்துகொண்டதாகவும், மற்றும் அது மற்ற எல்லா மஞ்சள் நிறக் குருவிகளுக்கும் மானிட வர்க்கத்தைக் குறித்து கூற முடிந்ததை அதிகமாகவே அறிந்ததாகவும் நினைத்துக்கொண்டது. ஆகையால் அது தன்னுடைய கூட்டிலிருந்து பறந்து அவர்கள் எல்லோரையும் குறித்து அது எப்படி அறிந்துகொண்டதென்றும், மானிட வர்க்கத்தைக் குறித்தும் அது பேசத் துவங்கினது. மேலும், திடீரென்று, பர்டூவிலிருந்து ஒரு பேராசிரியர் நடந்து வந்து அதனிடம் சில உயரிய மெருகேற்றப்பட்ட வார்த்தைகளை பேசத் துவங்கினார், அந்த சிறு குருவி தன்னுடைய கண்களை சிமிட்டி தன்னுடைய தலையை திருப்பிக்கொண்டது மற்றும்…இப்பொழுது, அதற்கு கண்கள் இருந்தன, அது அந்த பேராசிரியரைக் காண முடிந்தது. அதற்கு காதுகள் இருந்தன, அது அவர் கூறினதை கேட்க முடிந்தது. ஆனால், உண்மையாகவே, அவர் எதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார் என்பதை அது அறிந்துகொள்ளவில்லை. ஏன்? அது ஒரு மஞ்சள் நிற குருவியின் மூளையையே பெற்றிருந்தது. அது வெறுமென ஒரு பறவையின் மூளையையே பெற்றிருந்தது. அது பெற்றிருந்ததெல்லாம் அவ்வளவுதான். அது ஒரு மனித மூளையைப் பெற்றிருக்கவில்லை, ஆகவே அதனால் மானிட வர்க்கத்தைப்போல சிந்திக்க முடியவில்லை. 25 ஒரு மானிடவர்க்கம் ஒருபோதும் தேவனைப் போன்று சிந்திக்கவே முடியாதே! நீங்கள் மானிடராய் இருக்கின்றீர்கள், உலகப் பிரகாரமான எல்லா அறிவும் ஒரு மஞ்சள் நிறக் குருவியின் மூளையைக் காட்டிலும் மேலானதல்ல. நீங்கள் செய்யும் அனைத்தும், நீங்கள் அதனால் உங்களையே புண்படுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவின் சிந்தையுடையவர்களாய் இருக்க வேண்டும். 26 ஜனங்கள் போய் ஸ்தாபனங்களில் சேர்ந்துகொண்டு, புதிய பிறப்பிற்கு பதிலாக ஒரு கைக்குலுக்குதலை பதிலியாக எடுத்துக்கொள்ளக் காரணம், அவர்கள் புதிய பிறப்பை தவிர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிய பிறப்பை விரும்புகிறதில்லை. நாம் அதை வேதாகமத்திலிருந்து பேசுகிறோம் என்பதை அவர்கள்—அவர்கள் அறிவார்கள், ஆகவே அவர்கள் அதற்காக ஏதோ ஒரு பதிலியை வைக்க விரும்புகிறார்கள். பெந்தேகொஸ்தே ஜனங்களும் அவ்வளவு மோசமாகி, வேறு ஏதோ ஒன்றை பதிலியாக வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களே! அவர்கள் அதை தரம்பிரிக்க விரும்புகிறார்கள். “நாம் கரங்களை குலுக்கலாம் மற்றும் சபையில் சேர்ந்துகொள்ளலாம், தெளிக்கப்படுதலோ அல்லது ஞானஸ்நானம் கொடுப்பதோ,” அல்லது வேறேதோ ஒன்றை செய்யலாம் என்று அது அப்படியே வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் புதிய பிறப்பைக் குறித்து பயப்படுகிறார்கள். அதைக் குறித்து பிரான்ஹாம் கூடாரம் பயமடைந்து கொண்டிருக்கிறது என்று நான் சில சமயங்களில் நம்புகிறேன்! 27 இப்பொழுது, அது ஒரு பிறப்பு என்பதை நாம் யாவரும் அறிவோம். அது எங்கே இருக்கிறதென்றோ, அல்லது எங்கே என்றும், அதன் இருப்பிடம் எங்கே என்றும் நான் கவலைப்படுகிறதில்லை, அது ஒரு அலங்கோலம். ஒரு குழந்தையானது ஒரு தவிட்டுக் குவியலின் மேலோ, ஒரு கடினமான தரையின் மீதோ, அல்லது மருத்துவமனையில் இளஞ்சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட அறையில் பிறந்தாலும், எப்படியாயினும் அது ஒரு அலங்கோலமான தாகத்தான் இருக்கிறது. ஒரு கன்றுக்குட்டியின் ஒரு பிறப்பாயிருந்தாலும், வேறெந்த ஒன்றின் பிறப்பாயிருந்தாலும், அது ஒரு அலங்கோலமானதாகத்தான் இருக்கிறது. 28 ஒரு புதிய பிறப்பு ஒரு அலங்கோலத்தைக் காட்டிலும் வேறொன்றுமில்லையே! ஆனால் ஜனங்களோ மிகவும் ஆசார விறைப்பு நடை வாய்ந்தவர்களாகி, “நாம் எங்கே கரங்களை குலுக்குகிறார்களோ அங்கே போவோம். எங்கே அவர்கள் கூச்சலிடாமல் அழாமல், பீடத்தின் மேல் அடித்து கூக்குரலிடாமல் இருக்கிறார்களோ அங்கு நாம் யாவரும் போவோம்” என்கிறார்கள். நீங்கள் மனிதத் தன்மையுடையவர்களாயுங் கூட இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களே! மரித்து, ஜீவனை கொண்டு வருகிற, பிறப்பே நமக்குத் தேவையாயிருக்கிறது! 29 ஒரு பழைய, உருளைக்கிழங்கு வித்தை, ஒரு உருளைக்கிழங்கு வித்தை, நீங்கள் அந்த உருளைக்கிழங்கை எடுத்து அதை நிலத்தில் போடுங்கள். நீங்கள் புதிய உருளைக்கிழங்குகளை பெறும் வரை, அந்த பழைய உருளைக்கிழங்கு அழுக வேண்டியதாயிருக்கிறது. ஒரு தானியமானது அது அழுகுகின்ற வரையிலும் புதிய ஜீவனை பிறப்பிக்க முடியாது. 30 ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ தன்னுடைய அறிவாற்றலும், தன்னுடைய சுயநலமும் மரித்து, அழுகும் வரையிலும், புதிய பிறப்பை ஒருபோதும் பெறவே முடியாது, மரித்துப், பீடத்தண்டை மரித்து, கூச்சலிட்டு, எல்லாவித அலங்கோலத்தையும் பெற்று, உன்னுடைய வீறாப்பு தணிந்து போகும் நிலையில் தான், நீ மீண்டுமாய் தேவனுடைய ஆவியினால் பிறக்கின்றாய். நீ வீறிட்டலறினாலும், அந்நிய பாஷைகளில் பேசினாலும், மேலும் கீழுமாக குதித்தாலும், தன்னுடைய தலை வெட்டப்பட்ட ஒரு கோழி செட்டைகளை அடிப்பதுபோல அடித்தாலும் எனக்கு கவலையில்லை, நீ புதிய ஜீவனைக் கொண்டு வருகிறாயே! ஆனால் நாம் அதற்காக வேறெதோ ஒன்றை மாற்றீடு செய்துவிட்டோம், நாம் நிச்சயமாகவே, முதல் தரமான நவநாகரீக வழியையே விரும்புகிறோம். 31 அன்றொரு நாள், வெள்ளிக்கிழமை, நானும் என் மனைவியும் கடைக்குச் சென்று கொண்டிருந்தோம். நான் இதைப் பற்றியே இடைவிடாமல் பேச வேண்டுமென்று கருதவில்லை. ஆனால் நாங்கள் வீதி வழியாய் சென்ற காரணத்தால், நான் நிர்வாண ஸ்திரீகளுக்காகவே, என்னுடைய தலையை ஒரு பக்கமாக திருப்பி வைத்துக்கொண்டேன். நான் ஒரு பார்வையற்ற மனிதனாய் இருந்தபோது, அவர் என் கண்களை சொஸ்தப்படுத்தினால் நான் சரியான காரியத்தையே நோக்கிப் பார்ப்பேன் என்று நான் தேவனிடம் வாக்களித்திருந்தேன். நான் ஒரு சிலுவையை என்னுடைய காரில் தொங்க வைத்திருக்கிறேன். நான் இப்படிப்பட்ட காரியத்தைக் காணும்போது, நான் சிலுவையை நோக்கிப் பார்த்து, “ஓ, தேவனே, அதுவே என் தஞ்சம்” என்று கூறும் காரணத்தால், நான் சிலுவையை நோக்கிப் பார்த்தேன். 32 நான் அந்த ஸ்திரீகளைக் கண்டேன். மேடா, “நாம் இன்றைக்கு ஒரு பெண்ணைக் கூட பெண்டிருடைய ஆடை அணிந்தவளாய் காணவில்லையே” என்றாள். மேலும் அவள், “பில், அங்கே தன்னுடைய உடலின் மீது சிறிய பட்டைகளையுடைய அந்த ஸ்திரீயைப் பாரும்” என்றாள், தொடர்ந்து, “அது தவறு என்று அந்த ஸ்திரீக்குத் தெரியாது என்று நீர் என்னிடம் கூற நினைக்கிறீரா?” என்றாள். “அவள் அது தவறு என்பதை அறியாதிருந்தால், அப்பொழுது அவள் தன்னுடைய சுயாதீன சிந்தைக்குப் புறம்பேயிருக்கிறாள்” என்றாள். 33 நான், “தேனே ஒரு நிமிடம். அவள் ஒரு அமெரிக்க தேசத்தவள், அமெரிக்கர்கள் செய்வது போலவே அவள் செய்கிறாள்” என்றேன். நான், “இனியவளே, நான் அண்மையில் பின்லாந்தில் இருந்தேன்” என்றேன். 34 நான் அங்கு என்னை அமரச் செய்த மருத்துவர் மன்னினென் என்ற, ஒரு மனிதனிடம் விசாரித்தேன். நாங்கள் “சூனா,” என்றழைக்கப்படுகின்ற, அந்த—அந்த சுகாதார குளியல்களுக்காக போய்க் கொண்டிருந்தோம், அவர்கள் அங்கு உங்களை உள்ளே கொண்டு சென்று உங்கள் மீது உஷ்ணமான நீரை, அல்லது சூடான கற்பாறைகளிலிருந்து வந்த தண்ணீரை ஊற்றுகிறார்கள், அதனால் உங்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. பின்னர் அவர்கள் உங்களை குளிர்ந்த நீரில் குதிக்கச் செய்து, பின்பு எழுப்பிவிடுகிறார்கள். அதன்பின்னர் உங்களை ஒரு அறைக்குள் கொண்டு செல்ல, அங்குள்ள செவிலித்தாய்மார்கள், அந்த ஸ்திரீகள் ஆண்களை (நிர்வாணமாயிருக்கிறவர்களை) தேய்த்துவிட்டு, அவர்களை மீண்டுமாக திரும்பவும் குளத்திற்கு அனுப்புகிறார்கள். நான் உள்ளே செல்லவேமாட்டேன். நான், “வைத்தியர் மன்னினென், அது தவறு” என்றேன். 35 அவர். “அப்படியானால் சரி, சங்கை. பிரான்ஹாம், அது தவறுதான். அப்படியானால் ஒரு ஸ்திரீயை நிர்வாணமாக்கி அவளை மேஜையின் மீது கிடத்தி, அவளுக்குள்ள ஒவ்வொரு பாலுணர்ச்சி—பாலுணர்ச்சி அங்கங்களையும் பரிசோதிக்கும் உங்களுடைய அமெரிக்க மருத்துவர்களைக் குறித்து என்ன? மருத்துவமனைகளில் உள்ள உங்களுடைய செவிலித்தாய்மார்களைக் குறித்து என்ன?” என்றார். 36 நான், “சகோதரன் மன்னினன், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், மன்னினன், நீர் கூறுவது சரி” என்றேன். 37 அது என்ன? இது பழக்கவழக்கங்கள். நான் பாரிஸில் இருந்தபோது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறுநீர் கழிக்கும் இடங்கள் ஒரே இடமாயிருந்ததை என்னால் நம்ப முடியவில்லை. ஆண்கள் பெண்கள் இருவருக்குமே வீதியின் ஓரத்தில் கழிவறைகள் இருந்ததை, என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஸ்திரீகள் கடற்கரைக்கு நீந்தச் செல்லும்போது, ஒரு இளைஞனும் அவனுடைய காதலியும் நீந்திக் குளிக்கச் செல்லும்போது, அவர்களுக்கு ஆடை மாற்றும் அறைகளே இல்லாமல், அவர்கள் தங்களுடைய கடைசி ஆடை மட்டுமாய் எல்லா ஆடைகளையும் களைந்து விட்டு, பின்னர் தங்களுடைய முதுகு பக்கமாய் திரும்பி, ஒரு சிறிய கோடு போன்ற பட்டையான ஆடையை அணிந்து நீந்தச் சென்றதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது, ஆனால் அது அவ்வண்னமாகவே இருக்கிறது. அவர்கள் அதற்கு கவனம் செலுத்துவதில்லை. அது பிரான்சின் வழக்கமாயிருக்கிறது. 38 ஆப்பிரிக்காவில், ஆண்களும், பெண்களும், வாலிபர் மற்றும் வயோதிபர், ஆடையில்லாமல் பரந்த புல்வெளியினூடாக நடந்து செல்லுகிறார்கள். ஒரு கழிவறை என்னவென்பதை, அல்லது அது போன்ற காரியங்களையே ஒருபோதும் அறியாதவர்கள், அல்லது எவரும் மற்றவருடைய பார்வைக்கு புறம்பே சென்றதேயில்லை. ஆனால் அவர்கள் வித்தியாசத்தையே அறிந்து கொள்வதில்லை. அவர்கள் வித்தியாசம் அறியாதவர்கள். ஆனால் அது தேசங்களின் வழக்கமாய் இருக்கிறது. 39 ஆனால் நான், “தேனே, நாமோ வித்தியாசமாய் உள்ளோம், நாம் வெறொரு தேசத்திலிருந்து வந்தவர்களாயிருக்கிறோம். நாம் இங்கு அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிறோம், அதுவே இந்தக் காரியங்கள் மிகவும் தவறானவை என்பதை காணச் செய்கிறது. ஏனென்றால் வேதம், ‘இப்படி அறிக்கையிட்டு, உரிமை கோருகிறவர்கள், தாங்கள் அந்நியரும், பரதேசிகளுமாயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் வரப்போகிற நகரத்தையே நாடித் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையுமே அவர்கள் தெரியப்படுத்துகிறார்கள்,’” என்று கூறியுள்ளது. 40 இத்தாலியிலோ, பிரான்ஸிலோ, ஆப்பிரிக்காவிலோ, வேறெந்த தேசத்திலோ இருக்கிற ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ, பரிசுத்த ஆவியினால் மீண்டுமாய் பிறந்திருக்கிறவர்கள், அந்தக் காரியங்களை செய்கிறதில்லை. அவர்கள் அந்த ஆடைகளை அணியமாட்டார்கள். அவர்கள் அவ்விதம் நடந்துகொள்ளமாட்டார்கள், அவர்கள் வேறொரு தேசத்திற்குரியவர்களாய் இருக்கிறபடியால் அதை ஆளுகை செய்கிறவரும் உண்டுபண்ணியவரும் தேவனாய் இருக்கிறார். நாம் பரத்திலிருந்து வந்தவர்களாயிருக்கிறோம். உங்களுக்குள்ளாக இருக்கின்ற ஆவியே, உங்களுடைய ஜீவியத்தை செயல்பட தூண்டுகிறதாய் இருக்கிறது. நீ ஒரு அமெரிக்கனாய் இருந்தால், அமெரிக்கர்கள் செய்கிறதை போன்றே நீ செய்வாய். நீ பிரபஞ்சுக்காரனாய் இருந்தால், பிரஞ்சுக்காரர்களைப் போலவே நீ செய்து, மற்றவர்களை விமர்சனம் செய்வாய். ஆனால் நீ தேவனை உடையவனாயிருந்தால், பரலோகத்தில் அவர்கள் செய்கிறவிதமாகவே நீ செய்வாய், உன்னுடைய ஆவியானது மேலிருந்து வருகிறபடியால் அது உன்னை கட்டுப்படுத்துகிறது. 41 ஏதோ ஒரு சிறிய காரியத்தை நீங்கள் நோக்கிப் பார்க்கலாம். வேதாகமத்தில், இந்தப் புதிய நகரத்தை தேடினவர்கள், வித்தியாசமாய் நடந்துகொண்டனர். அவர்கள் அந்நியரும், பரதேசிகளுமாயிருக்கிறார்கள் என்று அவர்கள் வெளிப்படையாகக் கூறினார்கள். ஆனால் காயீனின் பட்சத்திலோ, அவர்கள் நிலையற்று அலைகிறவர்களாயும், துரோகிகளாயுமாயினர். ஆனால் கிறிஸ்தவர்களோ அந்நியரும், பரதேசிகளுமாயிருந்தனர். நிலையற்று அலைகிற ஒருவனுக்கு இல்லமே இல்லை, ஒரு துரோகியானவன் ஒரு பயங்கரமான நபராய் இருக்கிறான். ஆனால் ஒரு பரதேசியோ ஒத்துக்கொள்ளப்படுமளவிற்கு உண்மையானவனாகவும், ஒரு உண்மையான தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு போகிறவரைக்கும், வீட்டிற்குச் செல்லும் தன்னுடைய வழியைக் கண்டறிய முயற்சிப்பவனாயும், தன்னுடைய ஜீவியத்தில் அவன் வேறொரு தேசத்திலிருந்து வந்து ஏதோ ஒன்றை அவன் உடையவனாயிருக்கிறான் என்பதை பகிரங்கமாய் கூறுபவனுமாயிருக்கிறான். அதுதான் காரணமாய் உள்ளது. 42 ஆனால் அதே சமயத்தில் இவ்விதமாய் செய்கிற ஜனங்களையும், இந்தப் பொருட்களை அணிந்து கொள்கிற அந்த ஜனங்களையும், நான் உங்களுக்கு கூறட்டும். நான் முப்பதாயிரம் சீர்படாத அஞ்ஞானிகளையும், நிர்வாணிகளையும், கம்பள ஜாதியினரையும், தென் ஆப்பிரிக்காவில் கண்டேன். பதினாறு-, பதினெட்டு-, இருபது வயதான பெண்களும், பையன்களும் ஒரு சிறு ஆடை கூட இல்லாமல், தங்களுடைய முகங்களில் சேறோடும், வர்ணம் தீட்டப்பட்டவர்களாயும், தங்களுடைய மூக்குகளில் எலும்புகளை செருகினவர்களாயும், தங்களுடைய காதுகளிலிருந்து மரக்கட்டைகள் தொங்கிக் கொண்டிருக்க, மனித எலும்புகளோ அல்லது வேறெந்த எலும்புகளோ தங்களுடைய முடிகளில் பின்னிக்கொண்டிருக்க, மிருகங்களினுடைய பற்கள் அவர்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்க, அவர்கள் உலகத்தில் பிறந்தவிதமாகவே நிர்வாணமாக, அதை அறியாமல் அங்கு நின்றுகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபோது, முகங்குப்புற விழுந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழும்பி நின்று தங்களுடைய மார்பையும் உடலின் மறைவுறுப்பையும் தங்களுடைய கையோடு கைகோர்த்து மறைத்துக்கொண்டு நடந்துசென்று, அணிந்துகொள்ள ஆடைகளைத் தேடினர். ஏன்? அவர்கள் இந்த உலகத்திற்கு அந்நியர்களும், பரதேசிகளுமானார்கள். அல்லேலூயா! அவர்கள் அவரிடமிருந்து தூரமாய் இருந்தனர். ஆம், ஐயா. 43 ஓ, ஆம், இந்த ஜனங்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் சபைகளை சேர்ந்தவர்கள். அவர்கள் விலகிப்போய், “நாங்கள் மெதோடிஸ்டு, நாங்கள் பாப்டிஸ்டு, நாங்கள் பெந்தேகொஸ்துக்கள், நாங்கள் ஏழாம் நாளை ஓய்வு நாளாக ஆசரிப்பவர்கள். நாங்கள் இது, அது, மற்றது” என்கிறார்கள். அதற்கு இதனோடு எத்தகைய சம்மந்தமுமில்லை. உங்களுடைய ஆவியானது, உங்களுக்குள்ளிருக்கின்ற ஜீவனானது உங்களை செயல்படும்படி தூண்டிவிட்டு, நீங்கள் என்னவாய் இருக்கிறீர்கள் என்பதைக் கூறுகிறது. இயேசு, “அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள்” என்றார். 44 முதலாவது, சபையானது இஸ்ரவேலைப் போன்றாகிவிட்டது. அவர்கள் எல்லா அஞ்ஞான தேசங்களுமே ஒரு இராஜாவைப் பெற்றிருப்பதைக் கண்டனர். தேவன் இவர்களுடைய இராஜாவாக இருந்தார். அவர்கள் அஞ்ஞான தேசங்களுக்கு இராஜா இருப்பதைக் கண்டபோது, அவர்களும் அஞ்ஞான தேசங்களைப்போலவே செயல்பட விரும்பினர், ஆகையால் அவர்கள் தங்களுக்கு ஒரு இராஜாவை பெற்றுக்கொண்டனர். அவர்கள் அதைச் செய்தபோது, அவர்கள் தொல்லைக்குள்ளானார்கள். அது படிப்படியாக உள்ளே வரத் துவங்கினது. உலகமானது படிப்படியாக அவர்களுக்குள்ளாக வரத்துவங்கினது. முடிவிலே அது ஆகாபில் முற்றிற்று. ஒரு இராஜா அதற்கு சற்று நெருக்கமாக, அதற்கு கொஞ்சம் நெருக்கமாக வந்து, முடிவிலே அவர்களுடைய ஜீவனை நசுக்கினான். அவர்கள் அப்படியாய் சென்றனர். ஆனால் உண்மையான இராஜா வந்தபோது, அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. 45 சபையானது அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறது. அது தத்தெடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அது அரசியலையும், கல்வியையும் தத்தெடுத்துக்கொண்டுள்ளது. அது ஸ்தாபனங்களையும், சங்கத்தையும், பெரிய சபைகளையும், பகட்டாரவாரமாக உரையாற்றுகிற பிரசங்கிமார்களையும் தத்தெடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் உண்மையான இராஜா வருகிறபோது, அவர்கள் அவரை அறிந்துகொள்ளுகிறதில்லை, அவர்கள் தங்களுடைய இராஜாவாயிருக்கிற அதே பரிசுத்த ஆவியானவரை சிலுவையில் அறைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை, ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து நகைத்து, அவரை பரியாசம்பண்ணிகிறார்கள். யூதர்கள் தங்களுடைய மேசியாவிற்கு செய்தது போலவே, சபையானது தன்னுடைய மேசியாவிற்கு அதேவிதமாய் செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் அதை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய ஆழ்ந்த அறிவைப் பெற்றிருக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் தங்களுடைய கண்களினால், அவர்கள் எதைக் காண்கிறார்களோ அதை, பெரிய கட்டிடங்களை இந்த உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கும்படியான கோட்பாட்டால் போதிக்கப்பட்டிருக்கின்றனர். நாம் ஒருபோதும் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி அறிவுறுத்தப்பட—அறிவுறுத்தப்படவில்லை. நாம் நம்மை தாழ்த்தும்படிக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். 46 மேலும், ஒன்று என்ற எண் தேவனில், பெரும்பான்மையானதாய் உள்ளது. இன்றைக்கு வெளியே ஊழியக்களத்தில் உள்ள சுகமளிக்கும் சுவிசேஷகர்கள், அப்பேர்ப்பட்டதான போட்டிக்குரிய, போட்டியாளர்களாய் இருக்கிறார்கள். ஒருவர், “பாருங்கள், தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் அநேகமாயிரம் பேர்களை உடையவனாயிருக்கிறேன். உங்களுக்கு இருக்கிறதைக் காட்டிலும் எனக்கு ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது” என்கிறார். அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நாம் ஒருவரை அல்லது பத்து லட்சம் பேரை உடையாவராயிருந்தாலும், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்னுகிறது? நாம் தேவனுக்கு உண்மையாயிருக்கிறோமா? நாம் அவருடைய வார்த்தைக்கு உண்மையாயிருக்கிறோமா? நாம் பரிசுத்த ஆவியின் பரிசோதனையில் நிற்கிறோமா? அது உண்மைதானா? அதுதான் முக்கியமான காரியமாகும். 47 ஆனால் நாம் வேதாகமத்தின் பேரில் விட்டுக் கொடுத்துவிடுகிறோம். நம்முடைய பெந்தேகொஸ்தே ஜனங்களில் அநேகர், இந்த வேதாகமத்தின் அடிப்படை போதகங்களின் பேரில், விட்டுக்கொடுத்து விடுகிறார்கள். அங்கேயோ…நான் உள்ளுணர்வுகளை புண்படுத்த விரும்பவில்லை. நான் என்னுடைய சொந்த சபையில் இருக்கிறேன், நான் என்ன உணருகிறேனோ, அதை அப்படியே என்னுடைய சபையில், என்னால்—என்னால் செயல்படுத்த முடியும், ஏனென்றால் நான் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இலட்சக்கணக்கான பெந்தேகொஸ்தே பிரசங்கிமார்களுக்கு வேதாகமத்தில் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினாலான ஞானஸ்நானம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை என்பது தெரியும். நான் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் யாராவது, எப்போதாவது, எங்கேயாகிலும் ஞானஸ்நானம் பெற்றார்களா என்று எனக்கு காண்பிக்கும்படி தலைமைப் பேராயருக்கு அல்லது எவருக்குமே சவாலிடுகிறேன். ஆனால் அவர்கள் விட்டுக்கொடுக்கிறார்கள், ஏனென்றால் ஸ்தாபனங்கள் அவ்வண்ணமாக செய்திருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் ஒரு நபரும், சரித்திரத்தின்படி, முன்னூறு ஆண்டுகள் வரை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி வேறுவிதமாய் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அது என்ன? ஸ்தாபனம். அதுதான் அதை செய்தது. விட்டுக்கொடுத்தல்! 48 இன்றைக்கு அவர்கள் வீதிகளில் ஊழியம் செய்கிற எல்லா பணியாளர்களையும் எடுத்துவிட்டார்கள். அவர்கள் சபையிலிருந்து கஞ்சிராவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் சபையிலிருந்து எல்லா மகிமையையும் எடுத்துவிட்டு, வேதாகம கருத்தரங்கு பிரசங்கத்தையும், வயதான கொண்டை சேவலின் பிரசங்கத்தையும், சமுதாயத்திலுள்ள மினுக்கான காரியங்கள் அனைத்தையும், தங்களுடைய ஸ்திரீகள் குட்டைக் கால் சட்டைகளை அணிவதையும், அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கும் ஆடைகளையும், ஆண்கள் புகை பிடித்தலையும், சூதாடுவதையும், அசுத்தமான விகடப்பேச்சுகள் பேசுவதையும் பெற்றுக்கொண்டனர். அது தேவனுடைய பார்வையில் ஒரு வெட்கக்கேடாய் உள்ளதே! அது கரடு முரடானது என்பதை நான் அறிவேன், ஆனால் இது யாரோ ஏதோ ஒன்றைக் கூறவேண்டிய நேரமாயிருக்கிறது. விட்டுக்கொடுத்தல், உள்ளே அனுமதித்தல், உலகத்தைப் போன்று நடித்தல்! 49 தேவனைத் தவிர ஒருவருமேயில்லாமல், நான் தனித்து நிற்க வேண்டியதாய் இருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை. நான் தேவனுடைய வேதாகமத்தின் சத்தியத்தையே பிரசங்கித்து அதற்காகவே நிற்பேன். நான் மரிப்பதானாலும், நான் சத்தியத்திற்காக அசையாமல் நிற்பேன். நிச்சயமாகவே. நமக்கு சத்தியம் தேவை. நான் சபையின்படியாயில்லாமல், நான் அளவிட்டுப் பார்க்க விரும்புகிற தேவனுடைய வார்த்தையின்படியாகவே அளவிட்டுப் பார்ப்பேன். 50 ஆனால் தெலீலாள், நீங்கள் கவனித்தீர்களா? சிம்சோனிடம் வல்லமை இருந்தது என்பதை அவள் அறியாதிருந்தாள். ஆனால் அந்த வல்லமை எங்கேயிருந்தது என்பதை அவள் அறியாதிருந்தாள். அந்த வல்லமை என்னவாயிருந்தது என்பதை அவளால் கூற முடியவில்லை, ஆனால் சிம்சோன் ஏதோ பெரிய வல்லமையினால் தரிப்பிக்கப்பட்டவனாயிருந்தான், அவள் அதைக் கண்டறிய விரும்பினாள். மேலும், தெலீளாள், அவள் தன்னுடைய அழகைக் கொண்டு தொடர்ந்து நயந்து பேசி இணங்கச் செய்தாள். ஓ, அவள் உண்மையாகவே பாலுணர்ச்சியை தூண்டும் விதமாகத்தான் உடை உடுத்திக்கொண்டாள். அவள் அவனுக்கு முன்பாக நடந்து அவள் இந்நாளின் வாலிப ஸ்திரீகள் சிலரைப் போன்று குறும்புத்தனம் செய்தாள், மற்றவர்கள் ஏதோ ஒரு பொழுதுபோக்காக துகிலுரியும் காட்சியைப் போல நடிக்க விரும்பி, சிம்சோன் தன்னிடம் மயங்கிக் கொஞ்சும்படியாக முயற்சித்தாள். 51 அதே காரியத்தைத்தான் உலகமானது சபைக்குச் செய்தது. இப்பொழுது உன்னுடைய மகத்தான வல்லமை எங்கே? 52 “பாருங்கள், நாம் ஸ்தாபித்துக் கொள்வோமானால், அது வல்லமையை தகர்வுறச் செய்யும்.” கத்தோலிக்க சபையானது அதைச் செய்தது. 53 “ஆனால் பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்து விட்டார்கள், சிம்சோனே.” ஒரு லூத்தர் வெளியே வந்தார். 54 அப்பொழுது அவர்கள் மீண்டுமாக ஸ்தாபித்துக் கொண்டனர். “நீ என்னை மற்றொரு கயிற்றினால் கட்டினால், அது என்னை அடக்கிவிடும்.” ஆகவே அவர்கள் அதைச் செய்தனர். 55 “பெலிஸ்தியர்கள் உன் மேல் வந்து விட்டார்கள், சிம்சோனே” என்ன சம்பவித்தது? வெஸ்லி கயிறுகளை அறுத்துக்கொண்டு வெளியே வந்தார். 56 “இப்பொழுது நீ தொடர்ந்து என்ன வஞ்சித்திருக்கிறாய். சிம்சோனே, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நீ அறியாயே? சரி, உன்னுடைய இருதயத்தில் உள்ள உண்மையை என்னிடம் கூறு.” “சரி, நீ என்னை மற்றொரு கயிற்றினால் கட்டு.” 57 “சரி, இப்பொழுது நாங்கள் அதைச் செய்வோம்” அது என்ன? அதுதான் ஸ்தாபனக் கயிறு. 58 “நீங்கள் என்னை சுயாதீனமாயிருக்க அனுமதியுங்கள், எனக்கு எந்த ஸ்தாபனமும் வேண்டாம். ஆகையால், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீயே எனக்கு அறுத்துவிட வேண்டியிருக்கும்.” ஆகையால் பெந்தேகொஸ்துக்கள் வெளிவந்தனர். உங்களுடைய வல்லமை எங்கே? “பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள்.” அவன் மீண்டுமாய் கயிறுகளை அறுத்தான். 59 ஆனால் இப்பொழுது என்ன சம்பவித்தது? அது சில மகத்தான மனிதர்களால், அவர்களுடைய போதகர்களுக்கான பெரிய இறைமையியல் பட்டங்களால் பெந்தேகொஸ்துக்களை பிடித்துவிட்டது. அவர்கள் மெத்தொடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு, அல்லது அவர்களில் மற்றவர்கள் பெற்றிருக்கிறதைப் போலவே சரியாக மிகுதியான பள்ளிகளையும் சடங்குகளையும் பெற்றிருக்கின்றனர். ஒரு சபைக்குச் சென்று ஒரு “ஆமெனையும்,” நீங்கள் கேட்கவே முடியாது, வட துருவத்திலுள்ள ஒரு கூட்டமான எஸ்கிமோக்களைப் போலவே அவ்வளவாய் குளிர்ந்துபோயுள்ளனர். குளிர்ந்த நிலை! கவலையற்ற நிலை! “இப்பொழுது பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்து விட்டார்கள் சிம்சோனே.” 60 அமெரிக்காவே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள். அந்த ஒருமைப்பாட்டின் ஆவி எங்கே? பெந்தேகொஸ்துவின் ஒற்றுமை எங்கே? தேவனுடைய சபையார், ஒருங்கிணைக்கப்பட்ட, தேவனுடைய சபை இது, அது, மற்றது, இந்த ஒன்று அதனோடு என்றும், அதனோடு இந்த ஒன்று என்றும், ஒவ்வொன்றுமே ஒரு வித்தியாசமான கோட்பாடுகளோடு உள்ளது. நீங்கள் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த ஒரு பட்டணத்திற்குள் செல்லமுடியாத அளவிற்கு நாம் மிகவும் பிரிக்கப்பட்டிருக்கிறோம், ஒரு சபை அதற்கு நிதி உதவியளித்தால், மற்றவர்கள் அதில் கலந்துகொள்ளவே மாட்டார்கள். அமெரிக்காவே, பொதுவுடைமைக் கொள்கையினர் உன்மேல் வந்துவிட்டார்கள். 61 நம்முடைய வல்லமை எங்கே? நம்முடைய மகிமை எங்கே? அது என்ன? காரணம் நாம் தேவனுடைய வல்லமைக்கு பதிலாக மனிதனுடைய ஞானத்தைப் பின்பற்றி சென்றுவிட்டோமே! ஏன், அவர்கள் நம்முடைய பிரசங்கிமார்களையும், மற்ற காரியங்களையும் மிகவும் விறைப்பானவர்களையும் ஆசார நுணுக்கம் பார்க்கிறவர்களாகவும் பெற்றுள்ளனர், நாம் மிகவும் ஆசார விறைப்பு நடை வாய்ந்தவர்களாகவும் வணங்கா கழுத்துள்ளவர்களுமாயிருக்குமளவிற்கு, அவர்கள் நம்மை ஸ்தாபனமாக்கிவிட்டனர், ஜனங்கள்…நீங்கள் இனிமேல் ஒரு ஆரவாரத்தை எப்போதாவது சபையில் கேட்பீர்களோ? ஒருவருமே அழுவதை நீங்கள் கேட்பதேயில்லை. துக்கங்கொண்டாடுபவருடைய நீண்ட இருக்கை அடித்தளத்தில் போடப்பட்டிருக்கிறது. சபையில் இனிமேல் மகிமையே இல்லை. நாம் யாவரும் செய்கிறது என்னவென்றால் பின்னாக அமர்ந்து நம்மால் முடிந்த அளவு விரைப்புள்ளவர்களாகவே இருக்கிறோம். நாம் சுயாதீனமுள்ளவர்களாக இல்லை. நாம் கட்டப்பட்டிருக்கிறோம். பிசாசு, தன்னுடைய நவீன பிசாசுகளோடு, ஜீவனுள்ள தேவனுடைய சபையை கட்டிப்போட்டிருக்கிறான். அது உண்மை. இனி சபையில் வல்லமையேயில்லை. இனி விடுதலையே இல்லை. ஜனங்களோ மிகவும் வெற்றாசார முறையையுடையவர்களாகவும், விரைத்துப்போனவர்களாகவும் உள்ளனரே! ஏன், தேவன் பெந்தேகொஸ்தே ஜனங்களின் மத்தியில் வந்து, அவர் தேவனென்று காண்பித்து, அவருடைய உயிர்த்தெழுதலின் அவருடைய அடையாளங்களை நிரூபிக்கிறபோதிலும், அது அவர்களை அசைப்பது கூட இல்லை. மகிமை! ஏன், அது ஒரு அவமானமாய் இருக்கிறதே! நான் தேசத்தினூடாக கடந்து செல்லும்போது, தேவன் கிரியை செய்து, அடையாளங்களை நிகழ்த்துகிறபோது, ஜனங்கள் அமர்ந்து, “சரி, அது சரிதான் என்று நான் நினைக்கிறேன். ஓ, அது செய்யப்படக் கூடும் என்று நான் அறிவேன்” என்கிறார்கள். அது அவர்களை அசைப்பது கூட இல்லையே! ஏன்? அவர்கள் தெலீலாளினால், உலகத்தோடு கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் விலங்குகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். 62 இப்பொழுது அவர்கள் இன்னும் அதிகமாக ஒன்று திரட்டப்பட்டு, ஒரு நேசக் கூட்டமைப்பிற்குள்ளாக அவர்கள் கட்டப்பட்டுள்ளனர். “பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள், சிம்சோனே.” அதைக் குறித்து நீ என்ன செய்யப் போகிறாய்? 63 “ஓ, நாங்கள் பெரிய ஸ்தாபனங்களை உடையவர்களாயிருக்கிறோம்”. நிச்சயமாக. “நாங்கள் எப்போதும் இருந்ததைவிட இப்போது அதிக அங்கத்தினர்களை உடையவர்களாய் இருக்கிறோம்.” ஆனால் ஆவியானவர் எங்கே? பரிசுத்த ஆவியானவர் எங்கே? 64 அதைத்தான் பிசாசு செய்திருக்கிறான். அது சபைக்குள்ளாகவே பசப்பி வசப்படுத்துகின்றது. அது சபையிடம், “என்னிடம் வாருங்கள், நீங்கள் வெறுமனே இதைச் செய்தால் நான் உங்களுக்கு ஒரு பெரிய மகத்தான கூடாரத்தை இங்கு கொடுப்பேன். நீங்கள் பெற்றுள்ள அந்த மதவெறி பிடித்த பிரசங்கியாரை நீங்கள் ஒழித்துத் தள்ளிவிட்டு, புத்தி சாதூர்யமாய் தெய்வீக துறையில் பட்டம் பெற்றிருக்கிற ஒரு மனிதனை பெற்றுக் கொள்வீர்களானால் நாம் ஒரு அருமையான பெரிய தரமான சபையைக் கட்டி நாம் மற்றவர்களைப் போன்றேயிருக்கலாம்” என்ற நயந்து பேசி இணங்க வைத்துள்ளது. உங்களுக்கு அவமானம்! இதைக் காட்டிலும் பீன்ஸ் கொட்டைக்கும் காபி கொட்டைக்கு வித்தியாசம் தெரியாத ஒரு மனிதனாய் இருந்து, ஆனால் அதே சமயத்தில் ஒப்புரவாக்கப்படாமல், தேவனுடைய வல்லமையினாலும், பரிசுத்தாவியினாலும் நிரப்பப்பட்ட ஒரு மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். 65 ஆனால், ஓ, ஏதோ ஒரு ஏழ்மையான பரிசுத்தவான் கூட்டத்தினூடாக காட்சியளித்து அந்நியபாஷையில் பேசவோ, அல்லது கொஞ்சம் சத்தமிடவோ அல்லது ஏதோ ஒன்றைச் செய்தால் மற்றவர்கள் யாவரும் அறிவிலியைப் போன்று சுற்றி திரும்பிப் பார்க்குமளவிற்கு மிகுதியான விரைப்புத்தன்மையை அது அடைந்துள்ளது. “அது என்ன? பாருங்கள், ஏன் வியப்படைகிறோம்? எங்கேயோ உள்ளே ஒரு மதவெறியன் நுழைந்திருக்க வேண்டும்.” அது உண்மையென்று உங்களுக்குத் தெரியுமே! ஏதோ ஒரு ஏழ்மையான பரிசுத்தவான் உள்ளே வந்து, போதுமான சந்தோஷமடைந்து தன்னுடைய கரங்களை உயர்த்தி, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுகையில், சுவிசேஷ பிரசங்கத்திற்கு “ஆமென்” என்று யாராவது ஒருவர் சத்தமிட, மற்றவர்கள் யாவரும் திரும்பி அவன் என்ன கூறினான் என்று பார்ப்பார்கள். அதுதான் பெந்தேகொஸ்துக்கள். காரியம் என்ன? நீங்கள் மெதோடிஸ்டுகளை, பாப்டிஸ்டுகளை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகிறீர்கள்; அவர்கள் கத்தோலிக்கர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டனர்; கத்தோலிக்கர்கள் நரகத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டனர். மேலும், யாவும் ஒன்று சேர்ந்து, இவை யாவும் நரகத்தையே பின்பற்றுகின்றன! உண்மை. 66 தெலீலாள் உங்களை பெரிய சபைகளுக்குள்ளாக, அருமையான கல்வி பயின்ற ஊழியர்களாய், மேன்மையான வகுப்புடையவர்களாய் எண்ணிக்கொள்ளும்படி கவர்ச்சித்திருக்கிறாள். “பாருங்கள், இங்குள்ள இன்னார் மற்றும் இன்னார் ஒரு கோடீஸ்வரன் என்று, உங்களுக்குத் தெரியும், நாம் அவரை நம்முடைய சபைக்கு வரவழைத்து விட்டால் நலமாயிருக்குமே! ஓ, என்னே!” அவர் மறுபடியும் பிறக்கவில்லையென்றால், அப்பொழுது அவர் அங்கிருக்க தகுதியுடையவரல்ல. அவர் இலட்சக்கணக்கான டாலர்களை பெற்றிருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். அவர் நாற்பது காலடிக் கார்களை சொந்தமாகக் கொண்டிருந்தாலும், அவர் என்னத்தைப் பெற்றிருந்தாலும், அவர் மறுபடியும் பிறக்க வேண்டியவராகவும், ஒரு புதிய பிறப்பிற்கு வரவேண்டியவராகவும், பரிசுத்த ஆவியினால் புத்துயிரளிக்கப்பட்டவராய், ஒரு புதிய பிறப்பிலிருந்து வந்து, சிடுசிடுக்கின்றவராய் (என்னை மன்னிக்கவும்), சத்தமிட்டு கூச்சலிடுகிறவராய், மற்றவர்கள் செய்கிறது போலவே தொடர்ந்து செய்து, பின்னர் அவர் அதைப் பெற்றிருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படியான ஒரு ஜீவியம் ஜீவிப்பவராயிருக்க வேண்டும். ஆமென். அதுதான் உங்களுக்குத் தேவை. 67 “சிம்சோனே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்து விட்டார்கள்.” பொதுவுடைமைக் கொள்கையினர் உன்மேல் வந்துவிட்டார்கள். உலகம் உன்மேல் வந்துவிட்டது. பிசாசு உன்மேல் வந்துவிட்டான். 68 அவர்கள் திரும்பிச் சென்று இயேசுவானவர் வாக்குத்தத்தம்பண்ணின பிரகாரமாய் தேவ ஆவியானவர் அற்புதங்களை நிகழ்த்துகிறதையும், அவருடைய உயிர்த்தெழுதலின் காரியங்களை நடப்பிக்கிறதையும் அவர்கள் காண்கையில், அவர்களோ, “உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் பிரான்ஹாம் அதிகமாக மனோதத்துவத்தோடே தொடர்புகொள்கிறார் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய போதகர் அதை பிசாசு என்று கூறினார்” என்கிறார்கள். 69 நீ தரித்திரன், மாயலக்காரன், ஏமாற்றப்பட்ட நாத்திகன், எல்லாவற்றிலும் மெருகேற்றப்பட்டு, ஆட்டுக் கம்பளி ஆடையிலிருக்கும் ஓநாய் நீ! இயேசு, “நீங்கள் என்னை அறிந்திருந்தால், நீங்கள் என்னுடைய நாளையும் அறிந்திருப்பீர்கள்” என்றார். ஆனால் நீங்களோ மற்ற உலகத்தாரைப் போன்று உங்களை செயல்பட தூண்டிவிட முயற்சிக்கும் ஒரு கூட்ட சவுல்களையே பெற்றுள்ளீர்கள். 70 நமக்கோ வார்த்தையின் பேரில் விட்டுக் கொடுக்காமல், ஆனால் சத்தியத்தை பிரசங்கித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் பேரில் நிற்திற ஒரு கூட்ட தேவமனிதர்களே தேவையாயிருக்கிறது. 71 ஆனால் உலகம் என்ன செய்திருக்கிறது? அது உன்னுடைய எல்லா வல்லமையையும் மழித்துப் போட்டது. நீ நசரேயனாய், பெந்தேகோஸ்தேக்காரனாய் பிறந்தாய், ஆனால் உலகமானது நிச்சயமாகவே உன்னுடைய வல்லமையை மழித்துப்போட்டது. இப்பொழுதோ அது எஞ்சியுள்ள மற்றவரைப் போன்று அவ்வளவு விரைத்துப்போயுள்ளது. 72 நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன சம்பவிக்கப்போகிறது? இந்தப் பொருளின் முடிவைக் குறித்து நான் நினைக்க முடிந்த ஒரு மகிமையான காரியம் உண்டு. 73 சிம்சோன் கட்டப்பட்டிருந்தபோதோ! நமக்கு ஒரு எழுப்புதலே இருக்க முடியாது. நம்முடைய நம்பிக்கைக்குரிய சகோதரன், பில்லி கிரஹாம், “நம்முடைய நாட்களில் எழுப்புதல்!” என்று கூறுவதை கவனியுங்கள். ஓரல் ராபர்ட்ஸ். “நம்முடைய நாட்களில் எழுப்புதல்!” என்று கூக்குரலிடுவதைக் கவனியுங்கள். மற்ற யாவரும், “நம்முடைய நாட்களில் எழுப்புதல்!” என்று கூறுவதை கவனியுங்கள். நாம் கட்டப் பட்டிருக்கின்றபோது நமக்கு ஒரு எழுப்புதல் எப்படியிருக்க முடியும்? நாம் பரிசுத்த ஆவியானவரை, நம்முடைய ஸ்தாபனங்களினாலும் பாரம்பரியங்களினாலும் கட்டியிருக்கிறோம், நமக்கு ஒரு பரிசுத்த ஆவியின் எழுப்புதலே இருக்க முடியாது. ஆமென். இது காலநிலையினால், உஷ்ணமாக சுடுகிறது என்பதை நான் அறிவேன், ஆனால் இது சத்தியமாய் இருக்கிறது. நீங்கள் அந்த விதமாய் கட்டப்பட்டு விரைத்துப் போயிருக்கும்போது எப்படி நமக்கு ஒரு பரிசுத்த ஆவியின் எழுப்புதல் இருக்க முடியும்! அவர்கள், “தேவபக்தியின் வேஷத்தை” உடையவர்களாயிருப்பார்கள் என்று வேதம் கூறியுள்ளது. “தேவபக்தியின் வேஷத்தை தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” என்ன வல்லமை? ஸ்தாபனத்தின் வல்லமையா? உலகத்தின் வல்லமையா? சபையின் வல்லமையா? பரிசுத்த ஆவியின் வல்லமையே! அதுவே சபையில் மறைவான இடமாய் உள்ளது. சபையானது கல்வி பயின்ற பிரசங்கிமார்களையும், பெரிய கட்டிடங்களையும், அணியலங்காரத் தோற்றத்தையும், பண்டைய மாதிரியான பரிசுத்தாவிக்குப் பதிலாக தெரிந்தெடுக்கும்போது, அவர்கள் மறுபடியும் ஊழியக்களத்தில் இருப்பதே மேலானதாகும். ஆமென். உண்மை. ஜனங்கள் பரிசுத்த ஆவியை அணையச் செய்து, அதை கட்டிபோட்டு, அதைக் குறித்து பயந்திருக்கும்போது எப்படி உங்களுக்கு ஒரு பரிசுத்த ஆவியின் எழுப்புதல் இருக்கப்போகிறது? அங்கே தான் தொல்லை இருக்கிறது. 74 “பெலிஸ்தியர்கள் உன் மேல் வந்து விட்டார்கள்.” ஆனால் நமக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை ஒன்று உண்டு, சிம்சோன் சிறையில் இருந்தபோது… 75 அவர்கள் அவனைப் பிடித்தபோது அவர்கள் செய்த முதல் காரியம் என்ன? முதலாவதாக, அவர்கள் அவனை கட்டிப் போட்டனர். அவர்கள் தேவனுடைய வல்லமையை எடுத்துப்போட்டு, அவர்கள் அவனுடைய இரகசியத்தைக் கண்டுபிடித்தனர். அவர்கள் உங்களுடைய இரகசியத்தை கண்டுபிடித்தனர். உலகம் உங்களுடைய இரகசியத்தை கண்டுபிடித்துவிட்டது. இப்பொழுது ஸ்திரீகளாகிய நீங்கள் யாவரும் உங்களுடைய தலைமுடியை வெட்டிக்கொள்கிறீர்கள், அது உலகத்தைப் போலவே நடந்துகொள்கிறதாயிருக்கிறது. புருஷர்களே நீங்கள் யாவரும் உலகத்தைப் போலவே நடந்துகொள்கிறீர்கள். சரி கேலிப்பேச்சுகளை, கீழ்த்தரமான கேலிப் பேச்சுகளை பேசுகிறீர்கள், வெளியே சென்று சில சிகரெட்டுகளை புகைக்கிறீர்கள், அண்டை வீட்டாருடைய மனைவிகளோடு வெளியில் அலைந்து திரிகிறீர்கள், அதைப் போன்று எல்லாவற்றையும் செய்து, உங்களுடைய பணியைக் காத்துக்கொள்ள கொஞ்சம் மதுவை தோழமை விருப்பத்திற்காக அருந்துகிறீர்கள். இவ்விதமான ஒரு செயலுக்கு விட்டுக் கொடுப்பதை காட்டிலும் மாப்பண்டதுகள்களை புசித்து, குழாய் தண்ணீரைக் குடித்துவிட்டு, வெறுந்தரையில் படுத்துக் கிடந்து தேவனுக்கு முன்பாக சுத்தமாகவும், உத்தமமாகவும் தரித்திருக்கவே விரும்புவேன். அதுவே சரியானது. உண்மை. தேவனிடத்தில் உண்மையாக தரித்திருங்கள். 76 “சிம்சோனே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள்.” பிரான்ஹாம் கூடாரமே, உலகப்பிரகாரமான கோட்பாடு உங்கள் மத்தியில் ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அதைக் குறித்து என்ன? நீங்கள் உங்களுடைய இரகசியத்தை வெளிப்படுத்திவிட்டீர்களா? சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் அங்கே மரத்தூளில் புரண்டுகொண்டிருந்தபோது தேவன் உங்களுக்குக் கொடுத்த அந்த இரகசியத்தை நீங்கள் வெளிப்படுத்திவிட்டீர்களா? அது சமுதாயத்திற்குரிய, சம்பிரதாய ஆராதனையோடு ஊர்ந்து இயங்க நீங்கள் அனுமதித்துவிட்டீர்களா? உங்களுக்கு என்ன சம்பவித்துள்ளது? தேவன் இறங்கி வந்து, ஒரு அற்புதத்தை நிகழ்த்தி கூட்டத்தாரினூடாக நேராக சென்று ஜனங்களிடம் அவர்களுடைய இருதயங்களின் அந்தரங்கங்களையும், மற்றும் ஒவ்வொரு காரியங்களையும் கூறி, வியாதியஸ்தரையும் மற்றும் அல்லலுற்றோரையும் சுகப்படுத்தி, அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்து, அவர்களுக்கு முடிந்தவரை அவருடைய வார்த்தையை அவ்வளவு கடினமாக, பரிசுத்த ஆவியினாலே பிரசங்கிக்க முடியும்; ஜனங்களோ, “பாருங்கள், அது எல்லாம் சரியாய் இருக்கிறது என்று நான் யூகிக்கிறேன். நாம் மிகவும் களைப்படையவில்லையென்றால், ஒருமுறை நாம் அதைக் கேட்டு மகிழ்வோம்” என்கிறார்கள். அதுதான் பிரான்ஹாம் கூடாரம். பெலிஸ்தியர்கள் உன் மேல் வந்துவிட்டார்கள். 77 வழக்கமாக, வார்த்தையானது பிரசங்கிக்கப்படும்போது, பண்டைய பரிசுத்தவான்கள் தங்களுடைய கண்களில் கண்ணீரோடு, தங்களுடைய காலூன்றி எழும்பி, நடந்து, விம்மியழுது, ஒரு வார்த்தையும் கூறாமல், வெறுமனே இரண்டு அல்லது மூன்று முறைகள் சுற்றி நடந்து வந்து, அமர்ந்து; பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்களே! வார்த்தை அவர்களை போஷித்ததே! “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பிரான்ஹாம் கூடாரமே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள். பெந்தெகொஸ்துகளே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள். 78 உண்மையாகவே, பெலிஸ்தியர்கள் உங்களைப் பிடித்துவிட்டார்கள், எஞ்சியுள்ள நீங்கள், நீண்ட காலத்துக்கு முன்னர், நீங்கள் ஒரு பிரஸ்பிடேரியன், பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, கத்தோலிக்கர் அல்லது வெறெதோ ஒன்றைத் தவிர வேறொன்றுமே உள்ளே நுழைய முடியாதபடிக்கு மிகவும் நெருக்கமாக நீங்கள் உங்களை கூட்டாக இணைத்துக்கொண்டபோதே பிடித்துவிட்டார்கள். நீங்கள் அவர்களில் எஞ்சியுள்ளவர்களோடு செய்யும்படியான ஒரு காரியமும் இருக்காது. 79 எனவே, நம்முடைய நாட்களில் எழுப்புதலா? வழக்கமாக எழுப்புதலை அளிப்பவர் உலகத்தால் கட்டப்பட்டிருக்கும்போது எப்படி நமக்கு எழுப்புதல் இருக்க முடியும்? உலகம் இருக்கின்ற இடத்தில் தேவன் வரவேமாட்டார், நீங்கள் அதன்பேரில் வெறுமனே சார்ந்திருக்கக் கூடும். நீங்கள் உலகத்தோடு இணைந்துகொண்டீர்கள், ஆகையால் அதைக்—அதைக் குறித்ததெல்லாம் அவ்வளவுதான். நீங்கள் உலகமானது உள்ளே ஊர்ந்து செல்ல அனுமதிக்கும்போது, நீங்கள் உலகத்தைப்போல நடந்துகொள்ளத் துவங்குகிறீர்கள், அதன்பின்னர் நீங்கள் முற்றுப் பெறுகின்றீர்கள். ஆனால் நீங்கள் உலகத்திலிருந்து ஒவ்வொரு விலங்கையும் வெட்டி எரிந்துவிட்டு, தேவனண்டை வரும்போது, நீங்கள் மீண்டும் சரசமாட செல்லும் வரை உபயோகிப்பார். 80 என்னுடைய செய்தியை முடிக்கையிலே, இந்தக் காலை எனக்கிருக்கின்ற ஒரே ஒரு நம்பிக்கை, இதோ இதுதான், “சிம்சோன் கட்டப்பட்டிருந்தபோது, புதிய ஜடை முடி வளரத் தொடங்கினது.” 81 தேவனே, முடிவு காலத்திற்கு முன்னதாக சரியாக மற்றொரு சபையை எங்களுக்கு அனுப்பும், பரிசுத்த ஆவியின் வல்லமை அவளுக்குள் வந்து, ஆவியின் கிரியைகளை வெளிப்படுத்திக்காட்ட, மாற்கு 16 சபையை பின்தொடர, அப்போஸ்தலர் 2:4; அப்போஸ்தலர் 2:38 இவை யாவுமாக சபையை தொடர்ந்து பின்தொடரச் செய்யும். அப்போஸ்தலர்களோடு அடையாளங்களும், அதிசயங்களும் இணைந்திருந்தன. மகத்தான அவருடைய உயிர்த்தெழுதலின் அடையாளங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தன. நாம் சிறையிலிருக்கும்போது, நிச்சயமாகவே தேவன் முடிவான பெரிய அறுவடைக்காக, எங்கோ ஒரு விளைச்சலை வளரச் செய்துகொண்டிருக்கிறார். அது நீயாக இருக்கலாம், இந்தக் காலை இங்குள்ள என்னுடைய கிறிஸ்தவ நண்பனே, அது உன்னுடைய பெலன் வளரத் துவங்குகின்றதாய் இருக்கலாம். நான் இந்தக் காலையில் இந்த செய்திக்காக ஜெபிக்கிறேன், இது தேசங்களுக்குள்ளாக செல்லும் இடமெல்லாம், இந்தச் செய்தியானது உங்களுடைய ஜீவியத்தில் மீண்டுமாய் ஆவிக்குரிய வல்லமையை திரும்பவும் வளரச் செய்யும் உங்களுடைய திட்டத்திற்கு ஊட்டச் சத்தைக் கொண்டு வர உதவியாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் நம்முடைய தலைகளை வணங்கி ஜெபம் செய்வோமாக. 82 ஓ, தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, ஒவ்வொரு நன்மையையும், ஆவிக்குரிய ஈவையும் கொடுப்பவரே, இந்தக் காலையில் இந்த வார்த்தைகளை எடுத்து அவைகளை இருதயத்திற்குள்ளாக வைத்து, கர்த்தாவே, அவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சும். உலகமானது சபையை மயக்கி சிக்கவைத்துள்ளதையும் முடிவிலே அதனுடைய வல்லமையை கண்டறிந்ததையும், அதனுடைய இரகசிய இடத்தை கண்டறிந்ததையும், அதனுடைய இரகசியம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்ததையும், அதனை மழித்துப்போட்டுள்ளதையும் கண்டு, ஜனங்கள் இந்த காரியங்களின் பேரில் ஜெபிப்பார்களாக. ஒரு காலத்தில் ஜெயத்தை உடையவர்களாயிருந்தவர்கள், வீட்டிலேயே தரித்திருந்து புதன் இரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை கவனிக்கும்படியாக, ஒரு காலத்தில் ஜெயமாய் ஆரவாரமிட்ட ஜனங்களிடமிருந்து அது எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து மழித்துப் போடப்பட்டுள்ளது. அவர்களுடைய இருதயங்களிலிருந்து சந்தோஷம் எடுக்கப்பட்டு, அவர்கள் தேவனுக்காக கொண்டிருக்கிற அன்பைக் காட்டிலும் உலகத்திற்கான அன்பே அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதைக் காட்டிலும் அதிகப்படியான உலக, உலகப்பிரகாரமான பொழுதுபோக்குகளுக்கே அதிக வாஞ்சை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மகத்தான இசைக்குழுவும் அளவுக்கதிகமான உணர்ச்சிவசப்படுதலும், கூச்சலிடுதலும் இல்லையென்றால், அப்பொழுது அவர்கள் ஆத்துமாவிற்கு ஆனந்த கண்ணீரை கொண்டு வருகிறதும், தெய்வீக சுகமளித்தலை திரும்ப கொண்டு வருகிறதும், சபைக்கு அப்போஸ்தல வரங்களை திரும்ப அளிக்கிறதும், இந்த நாளின் மேசியாவாகிய, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கொண்டு வருகிறதுமான, பண்டைய சுவிசேஷத்தை விரும்புகிறதில்லை. 83 ஆனால் இஸ்ரவேலர் தங்களுடைய இராஜாக்களால் கட்டப்பட்டிருந்த காரணத்தால், அவர்கள் உண்மையான இராஜாவைப் பின்பற்ற முடியாமற் போயிற்று: அந்த உண்மையான இராஜா, அவர் வந்தபோதோ, அவர்கள் அவரை அடையாளங் கண்டு கொள்ளவில்லை. இன்றைக்கும் அது அவ்வண்ணமே உள்ளது. ஓ கர்த்தாவே, மகிமையின் இராஜா பரிசுத்த ஆவியின் ரூபத்தில் தோன்றியுள்ளார், மேலும், கர்த்தாவே, அவர்கள் அதை அறியவில்லை. அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் மிக நெருக்கமாய் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர், அதாவது அவர்கள் அதை புரிந்துகொள்கிறதில்லை, ஏனென்றால் அது அவர்களுடைய ஸ்தாபனத்தில் இல்லை. கர்த்தாவே, இது ஜனங்களுக்கு செய்யப்பட்டுள்ள ஒரு பிசாசின் கிரியையாய் இருக்கிறது. 84 சிம்சோனின் தேவனே, கர்த்தாவே, இந்தப் புதிய விளைச்சல் வளரும் வரை, இருதயத்தில் உண்மையாயிருக்க, கதறி, மன்றாடி பற்றிக் கொண்டிருக்க விருப்பம் கொண்டிருக்கிறவர்கள், சீயோனில் மீண்டுமாய் சந்தோஷம் உண்டாகும் வரை, அதை அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கூட்டம் வந்து, மேசியாவையும், உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருக்கிற வல்லமையையும் காணுமட்டாய், அவர்கள் அதனோடே தரித்திருப்பார்களாக, இப்பொழுதோ அவர்கள் அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள். கர்த்தாவே, அவர்கள் இதைக் காணும்படி, அருளும். ஏனெனில் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] இப்பொழுதே வல்லமையை… ஓ, கர்த்தாவே, இப்பொழுதே வல்லமையை அனுப்பி ஒவ்வொருவரையும் அபிஷேகியும். அவர்கள் மேலறையில் இருந்தனர், அவர்கள் ஒருமனதோடு இருந்தனர், பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது அது நம்முடைய கர்த்தரால் வாக்களிக்கப்பட்டிருந்தது. ஓ கர்த்தாவே, இப்பொழுதே உம்முடைய வல்லமையை அனுப்பும், ஓ கர்த்தாவே, இப்பொழுதே உம்முடைய வல்லமையை அனுப்பும்; ஓ கர்த்தாவே, இப்பொழுதே உம்முடைய வல்லமையை அனுப்பி ஒவ்வொருவரையும் அபிஷேகியும். 85 நான் அவரை எவ்வளவாய் நேசிக்கிறேன்! அவருடைய வல்லமையை அனுப்புவாராக! அவர்கள் யாவரும் ஒருமனதோடு, மேலறையில் இருந்தனர். உலகம் யாவும் அவர்களிடமிருந்து வடிகட்டப்பட்டிருந்தது. அவர்கள் வெறுமையாக்கப்பட்டபோதோ, பரிசுத்த ஆவியானவர் வந்தார். 86 இன்றைக்கு அவர்கள் வந்து, “சபையில் சேர்ந்து, உங்களுடைய பெயரைப் புத்தகத்திலே பதிவு செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் தலை வணங்கி, ‘நான் கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகிறேன்,’ என்று கூறி, எழுந்திருங்கள்” என்கிறார்கள். பிசாசு அதே காரியத்தை செய்கிறான். நிச்சயமாகவே. யூதாஸ் ஞானஸ்நானம் பெற்றபோது, பிசாசும் ஞானஸ்நானம் பெற்றான். யூதாஸ் வெளியே சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்தபோது பிசாசும் வெளியே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். ஆனால் பிசாசு பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளவில்லை. அது தான் அது. அங்கேதான் அந்த மறைவான வல்லமை இருக்கிறது, அது ஒரு சந்தேகத்தின் நிழலுக்கப்பால், உறுதியாய் அறிந்துகொள்ளும், அந்த உயிர்த்தெழுதலாய் இருக்கிறது. ஆமென். 87 அவர் இங்கிருக்கிறார். அந்த மாறாத பரிசுத்த ஆவியானவர், மேசியாவின் மேலிருந்த ஒருவர், இன்னமும் தம்முடைய சபையில் இருக்கிறார். அவர் ஒருபோதும் விட்டுச் செல்வதில்லை. “உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும், நான் உங்களுக்குள்ளும், உங்களோடுங்கூட இருப்பேன். நான் அங்கிருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், இதைப் பார்க்கிலும் அதிகமாய் செய்வீர்கள்.” 88 ஆனால் உலகமோ, “ஓ, அவைகள் கடந்துபோன நாட்களாய் இருக்கின்றதே!” என்று அதை விட்டுக்கொடுக்க உடன்படுகிறது. பிசாசு வெறுமனே அதைத்தான் உங்களுக்கு செய்ய விரும்புகிறான். அவர்கள் உங்களை ஏமாற்றி மனதை மயக்க விரும்புகிறார்கள். தேவனோ நீங்கள் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார். தேவன் உங்களிடம் விரும்புவது…நீங்களோ, “ஓ, அங்கு தொடர்ந்து நடைபெறுகின்ற எல்லாவற்றையும் நான் விசுவாசிக்கிறதில்லை” என்கிறீர்கள். தொடர்ந்து போய் ஜீவியுங்கள், தொடர்ந்து போய் உங்களுடைய பாவத்தில் ஜீவியுங்கள், உங்களுடைய பாவத்தில் ஜீவியுங்கள். ஆனால் நீங்கள் அழுகும் வரை, நீங்கள் உங்களுடைய சொந்த கருத்துக்களுக்கு அழுகும் வரை, நீங்கள் உங்களுடைய சொந்த நவநாகரீகத்திற்கு அழுகும் வரை, மீண்டுமாய் புத்துயிரூட்டப்படவோ மறுபடியும் பிறக்கவோ முடியாது, ஆனால் அந்த புதிய ஜீவனானது கீழே சென்ற ஒன்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாய் இருக்கும். 89 ஒரு தானிய விதையானது மஞ்சள் நிறமாய் கீழே சென்று, அது பச்சை நிறமாய் மேலே வருகிறது. அது கடினமாய் கீழே சென்று, உள்ளே புதைக்கப்பட்டு, வளையத்தக்கதாயும் காற்றினால் அசைந்தாடுகிறதாயும் மேலே வருகிறது. ஓ, மகிமை! அல்லேலூயா! காற்று வீசத் துவங்கும்போது, தானியமானது தானாய் அசையவும், முன்னும் பின்னுமாய் சாய்கிறதேயன்றி, வேறொன்றையும் செய்ய முடிகிறதில்லை. ஆனால் அந்த சிறிய—அந்த சிறிய கதிரானது வளைந்து களிகூர்ந்து, அதன்பின்னர் செழித்தோங்கி, தன்னை பலப்படுத்திக் கொள்கிறது. தானியமானது மரித்து அழுகும் வரை அது ஒருபோதும் ஒரு கதிராகவே முடியாது. மரிப்பது மட்டுமல்ல; ஆனால் அழுக வேண்டும். அது ஒருபோதும் திரும்பி வராமல், அதிலிருந்து ஜீவனே வெளிவருகிறது. 90 சற்று நேரத்திற்கு முன்பு நான் கூறியதுபோல, ஒரு பிறப்பானது ஒரு பயங்கரமான காரியமாகவும், அருவருப்பான அழுக்காயும், மாசுற்றதாயும், அருவருப்பான அழுக்கின் அழுக்காகவும் இருக்கிறது, ஆனால் அங்குதான் ஜீவன் இருக்கிறது. நீங்கள் உங்களை குப்பை என்று எண்ணிக்கொள்ளும்போது, உங்களுடைய மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு மற்றும் பெந்தேகொஸ்தே கோட்பாடுகளை குப்பை என்று எண்ணிக்கொள்ளும்போதே, பீடத்தண்டையில் மரிக்கின்றீர்கள், அதன்பிறகே புதிய ஜீவன் உள்ளே வருகிறது. அதற்கு மேல் பரிசுத்த ஆவியானவர் உங்களை ஆயத்தப்படுத்துகிறார்; நீங்கள் தேவனைக் காண்கிறீர்கள். 91 நாம் என்றோ ஒரு மகிமையின் நாளில் அவரைக் காண்போம். என்றோ ஒருநாள் அழிவின் எல்லைக்கப்பால் சென்றடையும்போது, நாம் அவரைக் காண்போம். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? என்றோ ஒருநாள் அழிவின் எல்லைக் கப்பால் சென்றடையும்போது, அங்கு எனக்காக ஒரு மகிழ்வான மறுதினம் காத்திருக்கும். 92 நான் கடந்த இரவு இங்கு மூலையில் நின்றுகொண்டு, நான் கண்ட எளிமையான ராபிலாஸனைக் குறித்து நினைத்தேன். அவர் வழக்கமாக இங்கிருக்கும்போது, தன்னுடைய பழைய கைத்தடியை நீட்டி என்னை அவருடைய கழுத்தோடு இழுத்து, அவருடைய கைத்தடியினால் என்னுடைய கழுத்தைச் சுற்றி, இங்கே பிரசங்க பீடத்திற்கு வந்து, “அங்கே எனக்காக ஒன்று காத்திருக்கிறது…” என்ற அந்த பாடலைப் பாடுவார். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.]…?… 93 ஏதோ ஒன்று சம்பவித்ததே! அது உலகத்தை அப்புறப்படுத்தியது. நான் காரியங்களை வித்தியாசமாக காணத் துவங்குகிறேன். நான் இந்த அமெரிக்க ஜனங்கள், தொடர்ச்சியாக, வருடா வருடம் செய்துகொண்டிருக்கிற நடைமுறைப் பாங்கைக் குறித்தும், புருஷர்களும், ஸ்திரீகளும் எப்படியாய் அவர்கள் தங்களையே இழிவுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதையும் மற்றும் பாவத்திற்குள்ளாக பிரவேசிக்கிறார்கள் என்பதையும் கண்டு, நான் சற்றேறக்குறைய நிலை குலைந்து போகும்வரை, இரண்டு அல்லது மூன்று முறைகள், அதன் மேல் கவலையாயிருந்து மிகவும் வியாகுலமடைந்திருந்தேன். நேற்றைய தினம், நான் தேவனிடம், “நான் இனிமேல் கவலைப்படமாட்டேன். அது அவ்வண்ணமாகவே இருக்கும் என்று உம்முடைய வார்த்தை கூறியுள்ளது. ஆனால் நானோ பிளவில் நின்று அதற்கு எதிராக எனக்குள்ளாக இருக்கிற யாவற்றோடும் கூக்குரலிடுவேன்” என்றேன். 94 அன்றொரு நாள், வனாந்திரத்திற்குப் பின்னால், கிரீன்ஸ் மில்லில் உள்ள, என்னுடைய குகையில் நின்றுகொண்டு, நாள் முழுவதும் ஜெபித்துக்கொண்டிருந்தேன். சுமார் மூன்று மணியளவில், சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது, நான் குகையிலிருந்து வெளியே வந்து, அங்கு ஒரு பெரிய கற்பாறையின் மேல் நின்றுகொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அங்கு நின்றுகொண்டு, கிழக்குப் பக்கமாக நோக்கிப் பார்த்துக்கொண்டு, கர்த்தரை துதித்துக்கொண்டிருந்தேன். நான் மலையுச்சியின் மேலுள்ள மரங்களுக்குப் பின்னால் சூரியன் மறைந்துகொண்டிருந்ததை காண முடிந்தது, நான் பள்ளத்தாக்கினூடாக உள்ள மற்றவைகளை நோக்கிப் பார்க்கையில், ஏராளமான இலை தழைகள், அப்படியே அவை அசைவற்று இருந்தன. நான், “கர்த்தாவே, ஒருநாள் நீர் கன்மலையின் வெடிப்பிலே மோசேயை மறைத்து, நீர் அவனண்டை கடந்து சென்றீர், ஏனென்றால் அவன் களைப்புற்றிருந்தான். ஆனால் நீர் கடந்து செல்லும்போது, அவன் அது, ‘ஒரு மனிதன் பின்பக்கம் போன்று காணப்பட்டது’” என்று கூறினான். நான், கர்த்தாவே, அந்தப் பிளவில் என்னை மறையும்” என்றேன். ஏறக்குறைய அந்த நேரத்திலேயே, என்னுடைய ஒரு பக்கத்திற்கு மேலிருந்து, ஒரு சிறு காற்று புதர்களினூடாக அசைந்து கொண்டே கீழே அங்கு வந்தது, அது தொடர்ந்து அசைந்து, நேராக என் பக்கமாக வந்தது, அந்த சிறு காற்று கீழாக அசைந்துகொண்டே, காடுகளினூடாக சென்றது. நான் அங்கேயே நின்றேன். என்றோ ஒருநாள், அது எங்கே அல்லது எப்பொழுது என்பதை சரியாக தேவன் மட்டுமே அறிவார், அழிவுள்ள ஜீவியத்தின் வாழ்க்கைச் சுழல்கள் யாவும் அசையாமல் நின்றுபோக, அப்பொழுது நான் சீயோனின் மலையின் மேல் வாசமாயிருக்கச் செல்வேன். என்றோ ஒருநாள் அழிவின் எல்லைக்கப்பால் சென்றடைவோம், என்றோ ஒருநாள் அது எப்போது அல்லது எங்கே என்பதை தேவன் மட்டும் அறிவார், என்ன சம்பவிக்கப் போகிறது? அவள் மறைந்துவிடப் போகிறாள், இந்த அற்பமான வாழ்க்கைச் சுழல்கள் யாவும் மாறிபோகும். அழிவுள்ள ஜீவியத்தின் வாழ்க்கைச் சுழல்கள் யாவும் அசையாமல் நின்றுபோக, அப்பொழுது நான் சீயோன் மலையில்மேல் வாசமாயிருக்கச் செல்வேன். தாழ்வான ஊஞ்சலாம், இனிய இரதம், நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்லவே வரும்; தாழ்வான ஊஞ்சலாம், இனிய இரதம், நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்லவே வரும். நான் அங்கு செல்வதற்கு முன்னர் நீங்கள் சென்றால், நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்வதற்காகவே வரும்; சகோதரன் பாஸ்வர்த்திடமும் மற்றும் என் நண்பர்கள் யாவரிடமும், கூடக் கூறுங்கள், நித்திய வீட்டிற்கு கொண்டு என்னைக் செல்வதற்காகவே வரும். இப்பொழுது தாழ்வான ஊஞ்சல்…(அது என்றோ ஒருநாள் கீழ்நோக்கி வந்து, என்னை மேலே தூக்கிச் செல்லும்.)…இரதம், (ஒவ்வொரு மரமும் எரிந்துகொண்டேயிருக்கும்; தேவனுடைய தூதர்கள், அக்கினிமயமான இரதம்.)…நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்லவே வரும்; தாழ்வான ஊஞ்சலாம், இனிய இரதம், நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்லவே வரும். 95 இந்நாட்கள் ஒன்றில், இந்நாட்கள் ஒன்றில் என்னுடைய மரண வேளைகளின் கடையாந்திர பகுதிகளில், நான் அவர் வருவதையே நோக்கிப் பார்க்கிறேன். அது உண்மை. நான் யோர்தானை நோக்கிப் பார்த்து என்னத்தைக் கண்டேன் நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்வதற்காக வருகிறதையே; (வயதான எலியா யோர்தானை நோக்கிப் பார்த்ததுபோலவே.) ஒரு கூட்ட பிரகாசமான தூதர்கள் என்னை பிந்தொடர்ந்து வந்தனர், அவர்கள் நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்வதற்காகவே வந்து கொண்டிருந்தனர். தாழ்வான ஊஞ்சலாம், இனிய இரதம், தாழ இறங்கி, நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்வதற்காகவே வரும்; தாழ்வான ஊஞ்சலாம், இனிய இரதம், நித்திய வீட்டிற்கு என்னைக் கொண்டு செல்வதற்காகவே வரும். 96 கர்த்தராகிய இயேசு, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட இரதத்தின் ஓட்டுநர், பண்டைய சீயோனின் கப்பல் மாலுமி, ஜீவனின் படகு, இந்த கட்டிடத்தினூடாக அசைந்து, பேசிக்கொண்டிருக்கிறார், அவருடைய சமூகம் இங்கிருக்கிறது. கல்லறையிலிருந்து அவரை எழுப்பின அதே பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். 97 அவர்கள் ஜெப அட்டைகளை கொடுக்காதிருக்கின்றபடியால், பட்டணத்திற்கு வெளியிலிருந்து ஜெபித்துக்கொள்ளப்படுவதற்காக, நான் அறியாதவர்கள், யாரேனும் இங்கு வந்துள்ளீர்களா? நான் அறியாதவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எனக்குத் தெரியாதவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நீங்கள், அங்குள்ள நீங்கள். அங்கே பின்னால் மீசையோடு உள்ள சிறு நபர் என்று நான் நினைக்கிறேன், தூரத்தில் யாரோ ஒருவர் தன்னுடைய கரத்தை மீண்டும் உயர்த்தினார். ஆம், நீங்களா, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தினீர்களா? சரி. அங்கே பின்னால், ஐயா, நீங்கள்தான், சரி. நீங்கள் யாவரும் எனக்கு அந்நியர்களா? அது கர்த்தராகிய இயேசு என்றும், இங்குள்ள மந்தையின் மாறாத மேய்ப்பன் என்றும், அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையாய் இருக்கின்றன என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் தம்முடைய சபையை அபிஷேகிக்கிறார் மற்றும் “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளை கூட நீங்களும் செய்வீர்கள். இவைகளைப் பார்க்கிலும் அதிகமானவைகளையே!” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 98 என்னை அறியாத நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தினீர்களா? தேவன் என்னிடம் உங்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை கூறமுடியும் என்றும், அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட ஸ்திரீயினிடம் அவர் பேசினது போன்றே அப்படியே என்னிடம் பேச முடியும் என்றும் நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அவர் நம்முடைய பெலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களுடைய நிலைமைகளை வெளிப்படுத்துவாரானால், நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசியென்றும், அவருடைய பிரசன்னம் இங்கு இருக்கிறதென்றும் அதன் காரணமாகவே அவர் இதை அனுமதிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீ உன்னுடைய மனைவிக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாய். அவளுக்கு இடுப்பு முறிவுற்று, இடுப்பு நகர்ந்துள்ளது. அது உண்மை. அது உண்மையானால், எழுந்திருக்கவும். சரி, போய் அவளை, சுகதேகியாய் காண். ஆமென். 99 அங்கே பின்னாக, கரம் உயர்த்தின மீசை வைத்திருக்கும் சிறு நபரே, உம்மைக் குறித்து என்ன? நீர் உம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீரா? தேவன் உங்களுடைய தொல்லைகளை என்னிடம் கூற முடியும் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் உம்முடைய மகன் சுகமாகிவிடுவான் என்று விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீரா? ஒரு பையன் இருக்கிறான், அவனுக்கு மூளை செயலற்றுப் போய்விட்டது. அது உண்மை. நீர் இல்லை…கென்டக்கியிலிருந்து வந்திருக்கிறாய். அது உண்மையானால், உன்னுடைய கரத்தை உயர்த்து. நான் உன்னை அறியேன், நான் அறிவேனோ? நான் செய்வேனானால்…இந்த வண்ணமாக உம்முடைய கரங்களை உயர்த்து, நாம் ஒருவரையொருவர் அறியோம். அது உண்மை. தேவனிடத்தில் நம்பிக்கையாயிரு. நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கின்ற காரணத்தினால், நீ விசுவாசிக்கிறவிதமாகவே உன்னுடைய மகனைக் காண்பாய். நீயே உன்னுடைய இருதயத்தில் வைத்துக்கொள். 100 இங்கே தங்களுடைய கரங்களை உயர்த்தினது யார், நான் அதை அறியவில்லை—அறியவில்லை…அது நீங்களா? சரி, திருவாளரே, நீர் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீரா? [அந்த மனிதர், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] நீங்கள், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கின்றீர்களா? நீர் மேலேறி வர வேண்டாம், வெறுமனே அங்கேயே நில்லுங்கள். சரி, ஐயா, உங்களுடைய தொல்லை என்னவென்றால், உங்களுக்கு சர்க்கரை நீரழிவு நோயுள்ளது. அது உங்களுடைய பாதத்தை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நீர் ஓஹையோவிலிருந்து வருகிறீர். உம்முடைய பெயர் திரு. மில்லர். வீட்டிற்கு திரும்பிச் சென்று, சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். சரி, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். சரி. நீர் விசுவாசிப்பதோடு…?…இதை விசுவாசியுங்கள். நீர் விசுவாசிக்கக்கூடுமானால்! 101 இங்கு அமர்ந்துள்ள சீமாட்டியே, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தினீர்களா? மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள, பெரிய உருவங்கொண்ட பெண்மணியே, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிப்பதினால்…நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீகளா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, தேவன் என்னிடம் உங்களுடைய தொல்லை என்னவென்பதை கூறினால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? இருதயக்கோளாறு. சரி, அது உண்மையானால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. 102 உங்களுக்கு அடுத்துள்ள பெண்மணி, எழும்பினாள். இருதயம்; ஆனால் அது உண்மையாகவே உங்களுடைய கண்களாய் இருக்கின்றன. நான் அவளை அறிவேன். சரி, நீ விசுவாசிக்கக்கூடுமானால்! 103 அங்கே பின்னால், அங்கே பின்னால் இருக்கின்ற அடுத்த மனிதனுக்கும் இருதயக் கோளாறும் கூட இருக்கிறது, மற்றும் ஒரு சரும வியாதியும் இருக்கிறது. தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 104 அங்கு எங்கோ பின்னால் ஒரு மனிதன், தன்னுடைய கரங்களை உயர்த்தினார்…திரு. ஷூபர்ட். சரி, ஐயா. சரி, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுடைய கண்களுக்காகவும், கூட, இல்லையா? அங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிற தாயாருக்காகவும், கூட நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அது உண்மையென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நாம் அந்நியர்கள். அது சரியா? உங்களுடைய கரத்தைக் குலுக்குங்கள், உங்களுடைய கரத்தை ஒருவருக்கு ஒருவர் குலுக்குங்கள். சரி, அது உண்மை. நீ விசுவாசிக்கக்கூடுமானால், நீ பெற்றுக்கொள்ளக்கூடும்! 105 உயிர்த்தெழுந்த இயேசு இந்தக் கட்டிடத்தில் இருக்கிறார். அவர் மாறாத ஒருவராயிருக்கிறார். அது உங்களுக்கு என்ன செய்கிறது? உங்களிடத்திலிருக்கிற எல்லா பெலத்தையும் உலகமானது பறிக்க அனுமதித்து விட்டீர்களா? மகிமை! எனக்கு புதிய பிறப்பு தேவையாயிருக்கிறதே! எனக்கு புதிய ஜீவன் தேவையாயிருக்கிறதே! அது எந்த விமானத்தில் வருகிறதானாலும் நான் ஒரு பரிசுத்த உருளையாய், வேறெந்த காரியமாய் இருக்க வேண்டியதாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது எந்த விமானத்தில் வருகிறதானாலும் எனக்கு கவலையில்லை, இப்பொழுது என் மேலிருக்கின்றதுபோலவே உண்மையான பரிசுத்த ஆவி எனக்குத் தேவை. நான் அதை காத்துக்கொள்ள விரும்புகிறேன்! நான் உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றைக் காட்டிலும், அதை பெற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். ஆமென்! நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இங்கிருப்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 106 அப்படியானால், ஒருவர் மீது ஒருவர் உங்களுடைய கரங்களை வையுங்கள். அவர் செய்யக் கூடிய இன்னுமொரு காரியத்தை எனக்குக் கூறுங்கள். ஒன்றுமேயில்லை. இப்பொழுது விசுவாசமாயிருங்கள். அது முடிந்து விட்டது என்றே விசுவாசியுங்கள். 107 தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் காரணரே, சகல நன்மையான ஈவுகளையும் தருபவரே, கர்த்தாவே, உம்முடைய ஆவியானது மிகுந்த அபிஷேகத்தோடு இங்கிருக்கிறது, இந்தக் கட்டிடமே சுவாசித்துக்கொண்டு, முன்னும் பின்னுமாய் அசைந்துகொண்டிருப்பது போன்று காணப்படுகின்றது. கர்த்தாவே, ஜனங்களால் ஏன் அதை புரிந்துகொள்ள முடியவில்லை? அவர்கள் இனி கொஞ்சமாயினும் உம்மைக் குறித்து அறிந்துகொள்ள முடியாதபடிக்கு அவர்கள் அவ்வளவாய் உலகத்தோடு இணைந்துகொண்டு, மிகவும் குளிர்ந்துபோய், சம்பிரதாயமாகவும், விரைப்பாயுமாகிவிட்டனரா? தேவனாகிய கர்த்தாவே, இந்த வல்லமையானது ஒவ்வொருவர் மேலும் விழுந்து, சுகவீனமாயுள்ள ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்தி, ஒவ்வொரு பாவியையும் இரட்சித்து, தேவனுக்கே மகிமையை சென்றடையச் செய்வதாக. தேவனுடைய குமாரனகிய, இயேசு கிறிஸ்து மூலமாய் நான் இதை கேட்கிறேன். ஆமென். 108 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுதே சென்று அப்படியே நீங்கள் விசுவாசிக்கிற விதமாகவே அதை கண்டடையுங்கள். அது அந்த விதமாகவே இருக்கும். நான் மற்றவர்களைக் குறித்து தரிசனங்கள் வருவதை காண்கிறேன். அது உண்மை. இன்றிரவு நான் திரும்பி வர வேண்டும். 109 இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் ஒருபோதும் விசுவாசிக்கப்போகிறதேயில்லை. அது உண்மை. இயேசு இதை ஒருமுறை செய்தார், அவர்கள், “நீர்…மேசியா வரும்போது, அவர் இதை எங்களுக்குச் சொல்வார்” என்றனர். அவள், “மேசியா அதைச் செய்வார் என்று நான் அறிவேன். ஆனால் நீர் யார்?” என்றாள். அவர், “நானே அவர்” என்றார். 110 அப்பொழுது அவள் ஊருக்குள்ளே ஓடி, “நான் என்னவாய் இருந்தேன் என்றும், நான் என்ன செய்திருக்கிறேன் என்பதையும் அறிந்துள்ள ஒரு மனுஷனை வந்து பாருங்கள். அவர் மேசியா தானோ?” என்றாள். 111 அவர், “கடைசி நாட்களில் இந்தக் காரியங்கள் மீண்டுமாய் உருவெடுக்கும். சபையானது சத்தியத்தை பிரசங்கித்துக்கொண்டிருக்கும், அது வார்த்தையின்மேல் நின்று கொண்டிருக்கும். அது எல்லா தேவனுடைய கற்பனைகளின்படியேயும் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அது உலகத்தோடு இணைந்து கொள்ளாது. அதனூடாக நான் அசைந்து, அதே காரியங்களைச் செய்வேன்” என்றார். 112 ஆனால் அவர், “அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாயும்,” மிகவும் பக்தியுள்ளவர்களாயும், சபைகளுக்கு செல்லுபவர்களாயும் இருப்பார்கள். “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என்றார். 113 ஜனங்களே நீங்கள், சபையில் நீங்கள் எங்கேயிருந்தாலும், அவர் சற்று முன்புதான் வெளியே அழைத்தார், தரிசனம் என்னிடத்திலிருந்து போய்விட்டது. என்னையே அறியாமல் உங்களிடம், நான் என்ன கூறினேனோ, அது உண்மையாயிருந்ததானால், அது யாராய் இருந்திருந்தாலும், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சபை முழுவதுமே, ஒவ்வொரு—ஒவ்வொரு நபரும். சரி. புரிகிறதா? அவர்களை அறியேன், அவர்களை ஒருபோதும் கண்டதேயில்லை; ஆனால் பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார், அவர் அவர்களை அறிவார். அது நானல்ல என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? 114 கவனியுங்கள்! அவர் அதனைக் கொண்டு என்னிடத்தில் நம்பிக்கை வைப்பாரானால், அவர் சத்திய வார்த்தையினால் என்னை நம்புவார், ஏனென்றால் வார்த்தையினால் மட்டுமே சத்தியம் வெளிப்பட முடியும். “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள, அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள், வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்துலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இன்னும் சிறிது நேரத்தில் ஒரு ஞானஸ்நான ஆராதனை இருக்கப்போகிறது. 115 நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. அவர்கள் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தம் செய்கையில், நான் மேய்ப்பரை ஜெபிக்கும்படியாக கேட்டுக் கொள்வேன். ஒரு ஞானஸ்நான ஆராதனை தொடங்கிவிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சரி.